தல பெருமை
ஸ்ரீயப்பதியான பகவான் ஸ்ரீமத் நாராயணன் திருமலையில் ஸ்ரீநிவாஸனாக எழுந்தருளி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். அந்த திருவேங்கடமுடையான் தென் தமிழ்நாட்டில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அருள் பாலிக்க வகுளகிரி ஷேத்திரம் என்னும் கருங்குளம் கிராமத்தில் வகுளகிரி மலையில் புரதான கோவிலான ஸ்ரீ ஸ்ரீநிவாசர் சன்னதிக்கும் ஸ்தல விருஷம் உறங்கா புளிய மரத்திற்கும் இடையில் சந்தன தாருவில் அருள்மிக வெங்கடாஜலபதி பெருமனார் எழுந்தருளியுள்ளார்.