அருள்மிகு அழகம்மன் திருக்கோயில், Santhankulam - 628704, தூத்துக்குடி .
Arulmigu Azagamman Temple, Santhankulam - 628704, Thoothukudi District [TM038224]
×
Temple History
தல வரலாறு
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் புளியமரத்தில் சுயம்பாக வெளி வந்த அம்மன் தான் அழகம்மனாக வழிபடுகின்றனர். இந்த அழகமனுக்கு ஒரு வரலாற்று சிறப்பு உள்ளது. அதாவது இவ்விடம் முழுவதும் புளியந்தோப்பாக இருந்தபோது புளியமரத்தில் வெளிவந்த சுயம்பை ஒரு பனையேரி புளியந்தோப்பு மத்தியில் குடிசை அமைத்து வழிபபட்டு வந்துள்ளார். அப்போது ஒரு நாள் அந்த வழியாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அதிகமாக பேறுகாலவழிவரவே, அவள் அதிக சத்தம் போட்டதால், சத்தம் கேட்டு வந்த பனையேரி கர்ப்பிணி பெண்ணை பார்த்து அந்த குடிசைக்குள் சென்று அமரும்படி கூறியுள்ளார். கர்ப்பிணி பெண் குடிசைக்குள் சென்றபோது அங்கு ஒரு பெண்யிருந்து பேறுகாலம் பார்த்து பெண்குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தன் உறவினருடன் வந்து பார்க்கும் போது அந்த பெண்ணும்...சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் புளியமரத்தில் சுயம்பாக வெளி வந்த அம்மன் தான் அழகம்மனாக வழிபடுகின்றனர். இந்த அழகமனுக்கு ஒரு வரலாற்று சிறப்பு உள்ளது. அதாவது இவ்விடம் முழுவதும் புளியந்தோப்பாக இருந்தபோது புளியமரத்தில் வெளிவந்த சுயம்பை ஒரு பனையேரி புளியந்தோப்பு மத்தியில் குடிசை அமைத்து வழிபபட்டு வந்துள்ளார். அப்போது ஒரு நாள் அந்த வழியாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அதிகமாக பேறுகாலவழிவரவே, அவள் அதிக சத்தம் போட்டதால், சத்தம் கேட்டு வந்த பனையேரி கர்ப்பிணி பெண்ணை பார்த்து அந்த குடிசைக்குள் சென்று அமரும்படி கூறியுள்ளார். கர்ப்பிணி பெண் குடிசைக்குள் சென்றபோது அங்கு ஒரு பெண்யிருந்து பேறுகாலம் பார்த்து பெண்குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தன் உறவினருடன் வந்து பார்க்கும் போது அந்த பெண்ணும் பனையேரியும் அங்கு இல்லை. அந்த குடிசையிலிருந்து அம்மனையே வழிப்பட்டு வந்தனர். அந்த பனையேரியையும் காவல் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர்.