Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோயில், Perunkulam - 628752, தூத்துக்குடி .
Arulmigu Thiruvazhutheeswarar Temple, Perunkulam - 628752, Thoothukudi District [TM038227]
×
Temple History

தல வரலாறு

பழம் பெருமை பொருந்திய பாண்டிய நாட்டில் சிவ சிந்தை நிறைந்த உக்கிரபெருவழுதி என்ற மன்னன் கொற்கையை தலைநகரமாக்கி கொண்டு ஆண்டு வந்தனர். சிவபொருமானுடைய அசரிரீ வாக்கின் வண்ணம் பொருணை நதிக்கரையில் பெருங்குளம் என்னற திவ்ய ஷேத்திரத்தில் சிவ ஆலயமும் சொங்கோல் திருமடமும் ஸ்தாபித்தனர். வரலாற்று புகழும் சாஸ்திர ஆகம சிற்ப விதிப்படி ஆலயம் நிறுவப்பட்டுள்ளது. சிவ பெருமான் தவ நிஷ்டையில் நான்கு வேதங்களை ஆசனமாக கொண்டு சிவலிங்க திருமேனியாகவும், அம்பிகை மங்களம் உடையவளாய் கோமதி என்ற நாமம் கொண்டு உருமேனியாய் தன்னை வேண்டும் அடியார்க்கு துன்பம் தீர்த்த்து இந்த கலிகாலத்தில் காத்தருளி மெய்ஞானம் கொடுத்து ஆசீர்வதித்து வருகிறாள்