அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோயில், Perunkulam - 628752, தூத்துக்குடி .
Arulmigu Mayakoothar Swamy Temple, Perunkulam - 628752, Thoothukudi District [TM038228]
×
Temple History
தல பெருமை
ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களுள் 56வது ஸ்தலம். தென் தமிழ்நாட்டிலுள்ள நவத்திருப்பதிகளில் ஆறாம் திருப்பதியாக திகழ்வது திருக்குளந்தை ( பெருங்குளம் ) இத்திருத்தலத்தில் ஸ்வாமி ஸ்ரீ வேங்கடவாணன், ஸ்ரீ சோரநாட்டியனாகவும், வேதம் தமிழ் செய்த மாறன் ஸ்ரீ நம்மாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்டு உத்ஸவர் ஸ்ரீ மாயக்கூத்தனாகவும், திருமால் கோயில் கொண்டுள்ளார். முன்னொரு காலத்தில் இத்திருக்கோயில் பெருமாளுக்கு நித்ய கைங்கர்யம் செய்து வந்த வேதவ்யாசருக்கும் குமுதவதிக்கும் திருமகளாக அவதரித்தவர் கமலவல்லி. கன்னிகையான கமலவல்லி ஸ்ரீ வேங்கட வாணனை வேண்டித்தவம் செய்ததால் இத்ஷேத்திரம் பாலிகாவனம் என்று அழைக்கப்படுகிறது. அச்சமயம் வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஸம்ஸாரணன் என்ற சிலாசாரன் குமுதவதியை கவர்ந்து சென்றுவிட்டப்படியால் வேதவ்யாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி சேதனர்களை...ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களுள் 56வது ஸ்தலம். தென் தமிழ்நாட்டிலுள்ள நவத்திருப்பதிகளில் ஆறாம் திருப்பதியாக திகழ்வது திருக்குளந்தை ( பெருங்குளம் ) இத்திருத்தலத்தில் ஸ்வாமி ஸ்ரீ வேங்கடவாணன், ஸ்ரீ சோரநாட்டியனாகவும், வேதம் தமிழ் செய்த மாறன் ஸ்ரீ நம்மாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்டு உத்ஸவர் ஸ்ரீ மாயக்கூத்தனாகவும், திருமால் கோயில் கொண்டுள்ளார். முன்னொரு காலத்தில் இத்திருக்கோயில் பெருமாளுக்கு நித்ய கைங்கர்யம் செய்து வந்த வேதவ்யாசருக்கும் குமுதவதிக்கும் திருமகளாக அவதரித்தவர் கமலவல்லி. கன்னிகையான கமலவல்லி ஸ்ரீ வேங்கட வாணனை வேண்டித்தவம் செய்ததால் இத்ஷேத்திரம் பாலிகாவனம் என்று அழைக்கப்படுகிறது. அச்சமயம் வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஸம்ஸாரணன் என்ற சிலாசாரன் குமுதவதியை கவர்ந்து சென்றுவிட்டப்படியால் வேதவ்யாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி சேதனர்களை உஜ்ஜீவிப்பிக்கும் பொருட்டு ஸ்ரீவைகுண்ட நிகேதனான வேங்கடவாணன் அக்கந்தர்வனான சிலாசாரனனை ஸம்கரித்து சாப விமோசனம் அளித்து குமுதவதியை மீட்டு வேதவ்யாசரின் திருமகளின் திருவுள்ளப்பபடியே திருமணம் செய்து கௌஸ்துபமார் பிறந்ததாகவும் தாயர் கமலவல்லி என்ற குளந்தைவல்லி நாயகி சமேத சோரநாட்டியனாகவும் நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதித்து அருள்கிறார்.