Screen Reader Access     A-AA+
அருள்மிகு பொய்சொல்லா மெய்யன்சாஸ்தா திருக்கோயில், Tholappampannai - 628619, தூத்துக்குடி .
Arulmigu Poisollamaiyan Temple, Tholappampannai - 628619, Thoothukudi District [TM038268]
×
Temple History

தல வரலாறு

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இத்திருக்கோயில் திருவைகுண்டம் பேரூந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் பொதிகை மலையில் தவழ்ந்து வரும் தாமிரபரணி வட பகுதியில் அமைந்துள்ளது. முன்பு ஒரு காலத்தில் அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நகை ஆபரணங்களோடு அவ்வழியாக போகும் போது இத்திருக்கோயிலில் வந்து தங்கி இருந்து செல்வார்கள். ஒரு நாள் இரவு தங்கும் போது திருடர்கள் வந்து அரசர் குடும்பத்தினரிடம் நகைகளை திருடி விட்டு சென்று விட்டனர். நகை திருடு போனது அறிந்து அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாஸ்தாவிடம் நாங்கள் உன்னை நம்பிதான் இங்கு வந்து தங்குவது உண்டு ...