அருள்மிகு மெய்நின்ற விநாயகர் திருக்கோயில், Aralvaimozhy, Aralvaimozhy - 629301, கன்னியாகுமரி .
Arulmigu Mei Nintra Vinayagar, Aralvaimozhy - 629301, Kanyakumari District [TM038277]
×
Temple History
தல வரலாறு
இக்கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபத்துடன் கல்லால் கூரைவரை கட்டப்பட்டள்ளது. கருவறையில் நாகரவிமானமும் செப்பு ஸ்தூபியும் அமைக்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் உள்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு 18.9.1114 ஆம் ஆண்டில் விநாயகர் பிரதிட்டை செய்யப்பட்டது என்று கூறுகிறது. இது கொல்லம் ஆண்டு 1114 ஆகும். இதற்குச் சரியான கிறித்துவ ஆண்டு 1939 ஆகும். எனவே இக்கோயில் சரியாக 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. மகாமண்டபம் மட்டும் வடக்கிலும் தெற்கிலும் விரிவு படுத்தப்பட்டு தெற்கில் மடப்பள்ளியும் வடக்கில் ஒரு சன்னதியும் ( அம்மன் ) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மன் வழிபாட்டில் இல்லை. விநாயகர் கருவறைக்கு இணையாக வடக்கில் ஒரு சிறு சன்னதி அமைக்கப்பட்டு அதில் லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. உப திருகோவிலான அருள்மிகு...இக்கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபத்துடன் கல்லால் கூரைவரை கட்டப்பட்டள்ளது. கருவறையில் நாகரவிமானமும் செப்பு ஸ்தூபியும் அமைக்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் உள்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு 18.9.1114 ஆம் ஆண்டில் விநாயகர் பிரதிட்டை செய்யப்பட்டது என்று கூறுகிறது. இது கொல்லம் ஆண்டு 1114 ஆகும். இதற்குச் சரியான கிறித்துவ ஆண்டு 1939 ஆகும். எனவே இக்கோயில் சரியாக 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. மகாமண்டபம் மட்டும் வடக்கிலும் தெற்கிலும் விரிவு படுத்தப்பட்டு தெற்கில் மடப்பள்ளியும் வடக்கில் ஒரு சன்னதியும் ( அம்மன் ) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மன் வழிபாட்டில் இல்லை. விநாயகர் கருவறைக்கு இணையாக வடக்கில் ஒரு சிறு சன்னதி அமைக்கப்பட்டு அதில் லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. உப திருகோவிலான அருள்மிகு மாரி முத்தாரம்மன் திருக்கோவில் கருவறை வடக்கு நோக்கி அமைந்துள்ளது.இத்திருக்கோவில் அயணபிள்ளை என்ற பொன்மணியின் கனவில் அம்மன் தோன்றி தனக்கு கோட்டை வாசல் அருகில் ஆரல்வாய்மொழி கிராமத்தில் கோவில் அமைக்க ஒரு இடத்தினை தேர்வு செய்து மறைந்ததாகவும் பின்னர் அப்பெண்மணி ஊர் பெரியோர்களை அணுகி சிறுக சிறுக திருக்கோவிலை கட்டியதாகவும் பின்னர் அப்பெண்மணியின் மறைவுக்கு பின்னர் ஊர் பொதுமக்களால் அம்மனை வழிபட்டு வந்துள்ளனர்.