Screen Reader Access     A-AA+
Arulmigu Agastheeswaramudaiya Nainar Temple, Vadukanpatru Kottaram, Agastheeswaram - 629701, கன்னியாகுமரி .
Arulmigu Agastheeswaramudaiya Nainar Temple, Vadukanpatru Kottaram, Agastheeswaram - 629701, Kanyakumari District [TM038368]
×
Temple History

தல வரலாறு

மூலவர் மூலவர் லிங்க வடிவினர். கல் படிமம், எதிரே நந்தி. திருமால் தனிக்கருவறையில் உள்ளனர். நின்ற கோலம் நான்கு கைகள், இரண்டு கைகளில் சங்கு, சக்கரம் பிற அபய முத்திரைகள். இரு மருங்கிலும் ஸ்ரீ தேவி, பூதேவி, இங்கே திருமால் ஆழகியமணவாளப் பெருமாள் எனப்படுகிறார். பரிவார தெய்வங்கள் மூலவர் சிவனைத் தவிர்த்து தேவியான அறம் வளர்த்த அம்மை, மணவாளப்பெருமாள், விநாயகர், முருகர், அகஸ்தியர், சாஸ்தா மற்றும் நாகர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

தல பெருமை

கைலாயத்தில் பரமசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதலால் கைலாயம் சமமின்றி தாழ்ந்தது. அப்போது சிவன் அகஸ்தியரிடம் தெற்கே செவ்வாய் பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவனுக்கு திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் அப்படி இருந்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று. இதனால் இங்குள்ள சிவன் அகத்தியர் பெயரால் வழங்கப்கட்டார். மதுரை பாண்டியன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான். தரிசனம் முடிந்தபின் பாண்டியன் கோயிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவனது குதிரை தறி கெட்டு ஓடியது. காவலர்கள் குதிரையை...