Screen Reader Access     A-AA+
Arulmigu Subramaniyaswamy Temple, Kumarapuram Thoppur, Marungoor - 629402, கன்னியாகுமரி .
Arulmigu Subramaniyaswamy Temple, Kumarapuram Thoppur, Marungoor - 629402, Kanyakumari District [TM038376]
×
Temple History

புராண பின்புலம்

இக்கோயிலின் தலபுராணம் தனிப்பட்ட முறையில் எழுதி வைக்கப்படவில்லை. ஆனால் சுசீந்திரம் கோயில் தலபுராணத்தில் இக்கோயில் தொடர்பான கதை வருகிறது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள சுசீந்திரம் தலபுராணம் 15 ஆம் சருக்கத்தில் மருங்கூர் சுப்பிரமணியர் தொடர்பான செய்திகள் தரப்பட்டுள்ளது. தாணுமாலையன் அருளால் தூய்மைப்பெற்ற தேவேந்திரன் தேவலோகம் சென்றதும் அவனது வாகனங்களில் உச்சை சிரவத்தை மருங்கூர் செல்ல ஆணையிடுகிறார் தாணுமாலையன். அப்போது மருங்கூர் கோயில் பேசப்படுகின்றது. மருங்கூர் கோயிலில் வள்ளி மாணவாளன் கோயில் கொண்டிருக்கிறான். அவனை அர்ச்சிப்பாய் என தாணுமாலையன் கூறியதும் உச்சை சிரவம் குதிரை என்னால் எப்படி முருகனை அர்ச்சிக்க முடியும்.என கேட்க தாணுமாலையன் அனந்தனையும் உன்னுடன் அழைத்துச் செல் என்றார். அது போலவே முருகனை வழிபட்டு குதிரை முக்தி பெற்றது. அது முதல்...