கருவறை மூலவர்
மூலவர் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவம், கல்படிவம், ஆவுடையில் அம்மன் நின்ற கோலம். இரண்டு கைகள். ஒரு கையில் மலர். இன்னொன்று லோலாஹஸ்தம் அம்மன் ஸ்ரீ சக்கர பீடத்தில் நிற்கிறாள்.
பரிவார தெய்வங்கள்
தெற்கு உட்பிரகாத்தில் விழாப்படிமங்கள் உள்ளன. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயானர், சந்திரசேகரமூர்த்தி, சிவகாமி, சரஸ்வதி எல்லாமே செப்புபடிமங்கள். இதே பிரகாரத்தில் கருவறைக் சுவரை ஒட்டி தட்சணாமூர்த்தி இருக்கிறார். கன்னிமூலையில் விநாயகர். மேற்கு பிராகரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மன் பஞ்சலோகப் படிமம். விஷ்ணு தனிக்கோயில். ஸ்ரீதேவியுடன் நாகராஜர் காசி விஸ்வநாதர் தனித்திருகோயில்கள். சுப்பிரமணியர் வடக்கு பிரகாரத்தில் தனிக்கோயில். இவர் வள்ளி தெய்வானையுடன்...கருவறை மூலவர்
மூலவர் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவம், கல்படிவம், ஆவுடையில் அம்மன் நின்ற கோலம். இரண்டு கைகள். ஒரு கையில் மலர். இன்னொன்று லோலாஹஸ்தம் அம்மன் ஸ்ரீ சக்கர பீடத்தில் நிற்கிறாள்.
பரிவார தெய்வங்கள்
தெற்கு உட்பிரகாத்தில் விழாப்படிமங்கள் உள்ளன. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயானர், சந்திரசேகரமூர்த்தி, சிவகாமி, சரஸ்வதி எல்லாமே செப்புபடிமங்கள். இதே பிரகாரத்தில் கருவறைக் சுவரை ஒட்டி தட்சணாமூர்த்தி இருக்கிறார். கன்னிமூலையில் விநாயகர். மேற்கு பிராகரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மன் பஞ்சலோகப் படிமம். விஷ்ணு தனிக்கோயில். ஸ்ரீதேவியுடன் நாகராஜர் காசி விஸ்வநாதர் தனித்திருகோயில்கள். சுப்பிரமணியர் வடக்கு பிரகாரத்தில் தனிக்கோயில். இவர் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலம், கல் படிமம், திருவாச்சி காட்டப்பட்டுள்ளது.
இதே பிரகாரத்தில் சண்டேஸ்வரர் தெற்கு நோக்கி இருக்கிறார். சனீஸ்வரருக்கு தனி சன்னதி . நின்ற கோலம், காகம் அலகை மேற்கு நோக்கி பார்கிறது. அம்மன் கருவறையைச் சுற்றி தூர்க்கை, சரஸ்வதி, பார்வதி நின்ற கோலம் சிற்பங்கள் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் தெற்கு நோக்கி இருக்கிறார். கிழக்கு பிரகாரத்தில் சந்திரன் சூரியன் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சாஸ்தா, நாகர் தெய்வங்கள் உள்ளன.