Screen Reader Access     A-AA+
Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001, கன்னியாகுமரி .
Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001, Kanyakumari District [TM038401]
×
Temple History

தல வரலாறு

இரண்டு கருவறைகள் நாகராஜர் இருக்கும் கருவறை இரண்டு அறைகளைக் கொண்டது. ஒலைவேய்ந்த கூறையால் ஆனது. இத்தகு அமைப்புடைய குமரி மாவட்ட கருவறை இது ஒன்று தான் பழமை மரபையும் பாதுகாப்பதன் தொடர்ச்சி . மூலவர் ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகர். இது கல்படிமம் .இது சுயம்புவாக உருவானது என்பது ஐதிகம். அனந்தகிருஷ்ணன் கோயில் கருவறை அத்தராளம். அர்தமண்டபம் என அமைந்தது. அர்தமண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடலாம் . கருவறை தெய்வமான் அனந்த கிருஷ்ணன் தர்னேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிவம் . நின்ற கோலம் ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கிறார். இடுப்பிலிருந்து நாகம்...

தல பெருமை

இக்கோயிலுக்கு என்று தனியாக தலபுராணம் கிடையாது. இது சமணக் கோயிலாக இருந்தது. கி.பி 16-ம் நூற்றாண்டு வரை சமணப்பள்ளியாக இருந்த இக்கோயிலின் வழிபாட்டு பழமை பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை. கல்குளம் வட்டம் சிதறால் கோயில் ஒரு சமண ஸ்தலம். இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டுக்கு முன் உள்ளது . ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குண வீரப்பாண்டியன் கமலவாக பண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்டு சமணர்கள் என தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சரியர்கள். இரு 500 ஆண்டுகளுக்கு முன்பு சமண தெய்வமாகவும் பாமர தெய்வமாகவும் இக்கோயிலில இருந்திருக்கிறது. நாகர்...