கருவறை
கருவாயின் முன் அர்த்தமண்டபம் இருந்தாலும் முகமண்டபத்திலிருந்தே பக்தர்கள் இறைவியை தரிசிக்க முடியும். கருவறை அம்மனின் வடிவம் கடுசர்க்கரையால் ஆனது. வடக்கு பார்த்தது நின்ற கோலம் எட்டு கைகள் மஹிஷனை அழித்த வடிவம். இப்பொது இவள் மஹிஷாசுரமர்தினி என படுகிறாள். கருவறையில் விழா படிமம் உள்ளது. நின்ற கோலம். நான்கு கைகள் பாசம் ,சூலம்,உடுக்கு ,கபாலம் உள்ளன.
பரிவார தெய்வங்கள்
கோயில் வடக்கு முன் மண்டபத்தில் வன்னியன் வன்னிச்சி தளவாய் மாடன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபக் கிழக்கில் பைரவர் மேற்கு நோக்கியும் சாஸ்தா உட்கடிகாசனத்தில் வடக்கு நோக்கியும் இருக்கின்றார். முன்மண்டபம் வலது புறம் மோகினியின் சிற்பம் உள்ளது. இங்கு பஞ்சகன்னியரின் சிறு உருவங்கள் உள்ளன. நாகரும் ...கருவறை
கருவாயின் முன் அர்த்தமண்டபம் இருந்தாலும் முகமண்டபத்திலிருந்தே பக்தர்கள் இறைவியை தரிசிக்க முடியும். கருவறை அம்மனின் வடிவம் கடுசர்க்கரையால் ஆனது. வடக்கு பார்த்தது நின்ற கோலம் எட்டு கைகள் மஹிஷனை அழித்த வடிவம். இப்பொது இவள் மஹிஷாசுரமர்தினி என படுகிறாள். கருவறையில் விழா படிமம் உள்ளது. நின்ற கோலம். நான்கு கைகள் பாசம் ,சூலம்,உடுக்கு ,கபாலம் உள்ளன.
பரிவார தெய்வங்கள்
கோயில் வடக்கு முன் மண்டபத்தில் வன்னியன் வன்னிச்சி தளவாய் மாடன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபக் கிழக்கில் பைரவர் மேற்கு நோக்கியும் சாஸ்தா உட்கடிகாசனத்தில் வடக்கு நோக்கியும் இருக்கின்றார். முன்மண்டபம் வலது புறம் மோகினியின் சிற்பம் உள்ளது. இங்கு பஞ்சகன்னியரின் சிறு உருவங்கள் உள்ளன. நாகரும் உள்ளது.
முகமண்டபம் வலது பக்கம் தென்மேற்கில் சிறு மண்டபத்தில் விநாயகர்,மாரியம்மன், காளி,அறம் வளர்த்த அம்மன், நாகர், சிவன், ஆகியோரின் கல்படிமங்கள் உள்ளன. அறம் வளர்த்த அம்மன் இரண்டு கைகளுடன் திரிபங்க வடிவில் உள்ளார். சிவன் எதிரே நந்தி உள்ளார். இம்மண்டபத்தின் அருகே உள்ள மண்டபத்தில் வழிபாட்டு படிமம் உள்ளது.
தல பெருமை
நாஞ்சில் நாட்டில் நங்கை என்னும் பின் ஒட்டுள்ள தெய்வங்கள் பல உள்ளன.அழகியபாண்டிபுரம் வீரவநங்கை,தெரிசனம்கோப்பு ஸ்ரீதர நங்கை பூதப்பாண்டி அழகிய சோழ நங்கை, குலசேகரபுரம் குலசேகர நங்கை என பல.இக்கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தலபுராணத்தில் உள்ளது.லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி ஆகிய மூவரும் குழந்தை வடிவில் இருந்து தங்கள் கணவர்கள் மீண்டும் வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பிருந்த போது காட்சி கொடுத்த தாய்த்தெய்வம் இவள்.கௌதமரின் சாபம் நீங்க இந்திரன் வேள்வி செய்த போது ஜோதி ரூபியாக முன் உதித்தவள்.இந்திரன் முன்னூறு கன்னியரை சாட்சியாக வைத்துப் பூஜித்தபோது தோன்றியவள் என்னும் கதைகள் வழங்குகின்றனநாஞ்சில் நாட்டில் நங்கை என்னும் பின் ஒட்டுள்ள தெய்வங்கள் பல உள்ளன.அழகியபாண்டிபுரம் வீரவநங்கை,தெரிசனம்கோப்பு ஸ்ரீதர நங்கை பூதப்பாண்டி அழகிய சோழ நங்கை, குலசேகரபுரம் குலசேகர நங்கை என பல.இக்கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தலபுராணத்தில் உள்ளது.லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி ஆகிய மூவரும் குழந்தை வடிவில் இருந்து தங்கள் கணவர்கள் மீண்டும் வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பிருந்த போது காட்சி கொடுத்த தாய்த்தெய்வம் இவள்.கௌதமரின் சாபம் நீங்க இந்திரன் வேள்வி செய்த போது ஜோதி ரூபியாக முன் உதித்தவள்.இந்திரன் முன்னூறு கன்னியரை சாட்சியாக வைத்துப் பூஜித்தபோது தோன்றியவள் என்னும் கதைகள் வழங்குகின்றன