அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பிருந்தாவனம் நகர், சென்னை - 600088, சென்னை .
Arulmigu Subra Mania Swamy Temple, Athampakkam, Chennai - 600088, Chennai District [TM000386]
×
Temple History
தல வரலாறு
இத் திருகோயில் சென்னை பிருந்தாவனம் நகர் ஆதம்பாக்கம் என்ற இடத்தில் திரு ஆர். சக்கரபாணி நாயக்கர் என்பவர் தமிழ் கடவுள் முருகப் பெருமான் மீது அதிக பக்தி கொண்டதால். அவரது சொந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு ஒருகோயிலை 1971 ஆம் ஆண்டு இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக விளங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியாக பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். மேலும் இத்திருக்கோயிலை விஷ்ணு ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்திருக்கோயிலில் ஸ்ரீ ராஜ விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ கோதண்ட ராமர் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஸ்ரீ சரபேஸ்வரர் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களும்...இத் திருகோயில் சென்னை பிருந்தாவனம் நகர் ஆதம்பாக்கம் என்ற இடத்தில் திரு ஆர். சக்கரபாணி நாயக்கர் என்பவர் தமிழ் கடவுள் முருகப் பெருமான் மீது அதிக பக்தி கொண்டதால். அவரது சொந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு ஒருகோயிலை 1971 ஆம் ஆண்டு இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக விளங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியாக பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். மேலும் இத்திருக்கோயிலை விஷ்ணு ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்திருக்கோயிலில் ஸ்ரீ ராஜ விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ கோதண்ட ராமர் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஸ்ரீ சரபேஸ்வரர் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன.இத்திருக்கோயில் வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து மூண்று கிலோ மீட்டர் தொலைவிலும் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருக்கோயில் தற்பொழுது பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வரும் ஏ.சேகர் என்பவர் தலைமையில் இத்திருக்கோயில் அறங்காவலர் பொறுப்பில் இருந்து வருகிறது.