அருள்மிகு திருத்தாளீஸ்வரர் திருக்கோயில், அன்பூண்டி - 632114, வேலூர் .
Arulmigu Thiruthaleeswarar Temple, Anpoondi - 632114, Vellore District [TM003884]
×
Temple History
தல பெருமை
இக்கோயில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 11- நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் சோழர் காலத்தில் முப்பனை ஈசுவரமுடைய மகாதேவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதற் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இரண்டு கல் வெட்டுகளும் மூன்றாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் ஒரு கல்வெட்டும் உள்ளன.
முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 1084) முப்பனை ஈசுவர மகாதேவற்கு நந்தவனம் அமைக்க ஊரால் ஆதிதாச சண்டேஸ்வரர் முன்னிலையில் நிலக்கொடை வழங்கப்பட்டது.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1088) விக்கிரமசோழ சம்புவராய அந்தராயமும், அந்தர வினியோகமும் கொடையாக அளித்துள்னர்.
இவ்வூர் சோழர் காலத்தில் ஐம்பூண்டி என்று அழைக்கப்பட்டுள்ளது. பிறகு ஐம்பூண்டி என்பது மக்கள் வழக்கில் மருவி அம்பூண்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர்...இக்கோயில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 11- நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் சோழர் காலத்தில் முப்பனை ஈசுவரமுடைய மகாதேவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதற் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இரண்டு கல் வெட்டுகளும் மூன்றாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் ஒரு கல்வெட்டும் உள்ளன.
முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 1084) முப்பனை ஈசுவர மகாதேவற்கு நந்தவனம் அமைக்க ஊரால் ஆதிதாச சண்டேஸ்வரர் முன்னிலையில் நிலக்கொடை வழங்கப்பட்டது.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1088) விக்கிரமசோழ சம்புவராய அந்தராயமும், அந்தர வினியோகமும் கொடையாக அளித்துள்னர்.
இவ்வூர் சோழர் காலத்தில் ஐம்பூண்டி என்று அழைக்கப்பட்டுள்ளது. பிறகு ஐம்பூண்டி என்பது மக்கள் வழக்கில் மருவி அம்பூண்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் சோழர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் மீயகறை நாட்டில் அமைந்துள்ளது என கல்வெட்டு ஆய்வின்படி அறியமுடிகிறது.