அருள்மிகு அப்பன் வெங்கிடாசலபதி திருக்கோயில், Cheranmahadevi - 627414, திருநெல்வேலி .
Arulmigu Appan Vengatachalapathy Temple, Cheranmahadevi - 627414, Tirunelveli District [TM039779]
×
Temple History
தல வரலாறு
புண்ணியநதியாம் தாமிரபரணி நதிக்கரையிலே அழகிய வயல் வெளிகள் மற்றும் வாழைத்தோட்டங்கள் நிறைந்த அழகிய திருநெல்வேலிமாவட்டம் சேரன்மகாதேவிஎன்ற ஊரில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம் அ/மிகு அப்பன்வெங்கடாஜலபதி திருக்கோயில் இந்த ஸ்தலம் தாமிரபணிநதிக்கரையில் வயல்வெளிகளின் நடுவே ராஜகோபுரத்துடன் மற்றும் தீர்த்தவாரி மண்டபத்துடனும் அழகாகஅமைந்துள்ளது.
பிருகுமுனிவர் மஹாவிஷ்ணுவை பிரதிஷ்டை செய்து தந்தையாக வரித்து அர்ப்பணங்கள் செய்ததால் அப்பன் வெங்கடாஜலபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு பல ரிஷிகள் தங்களின் தோஷ நிவர்த்தி பெற்ற ஸ்தலம். இந்த ஸ்தலம் சோமதீர்த்தகட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்தஊரில் வியாஸதீர்த்தம் மற்றும் ரோமஸ தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தகட்டங்கள் உள்ளன. மேலும்இந்த ஷேத்திரம் தாமிரபரணிநதிக்கரையில் அமைந்துள்ள புண்ணியஷேத்திரம் ஹரிஷேத்திரமாகியஇவ்வூருக்கு புராணகாலத்தில் நாதாம்புஜஷேத்திரம்...புண்ணியநதியாம் தாமிரபரணி நதிக்கரையிலே அழகிய வயல் வெளிகள் மற்றும் வாழைத்தோட்டங்கள் நிறைந்த அழகிய திருநெல்வேலிமாவட்டம் சேரன்மகாதேவிஎன்ற ஊரில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம் அ/மிகு அப்பன்வெங்கடாஜலபதி திருக்கோயில் இந்த ஸ்தலம் தாமிரபணிநதிக்கரையில் வயல்வெளிகளின் நடுவே ராஜகோபுரத்துடன் மற்றும் தீர்த்தவாரி மண்டபத்துடனும் அழகாகஅமைந்துள்ளது.
பிருகுமுனிவர் மஹாவிஷ்ணுவை பிரதிஷ்டை செய்து தந்தையாக வரித்து அர்ப்பணங்கள் செய்ததால் அப்பன் வெங்கடாஜலபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு பல ரிஷிகள் தங்களின் தோஷ நிவர்த்தி பெற்ற ஸ்தலம். இந்த ஸ்தலம் சோமதீர்த்தகட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்தஊரில் வியாஸதீர்த்தம் மற்றும் ரோமஸ தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தகட்டங்கள் உள்ளன. மேலும்இந்த ஷேத்திரம் தாமிரபரணிநதிக்கரையில் அமைந்துள்ள புண்ணியஷேத்திரம் ஹரிஷேத்திரமாகியஇவ்வூருக்கு புராணகாலத்தில் நாதாம்புஜஷேத்திரம் என்றபெயர் விளங்கி உள்ளது. இவ்வூரை கோயில் மாநகரம் என்று சொன்னால் மிகையாகாது. மேலும் அப்பன் வெங்கடாஜலபதி திருத்தலத்தைபற்றி வேதகால புராணநூல்களும் பிருகுமுனிவர், ரோமஸமுனிவர்,வியாஸமுனிவர், போன்றவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மேலும் மன்னர்கள்காலத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்குமுன்பு மன்னர்கள் ஆட்சியின் போது இங்கு நீர் மேலாண்மை விவசாயம்,அன்றைய நாகரிகம்,பண்பாடு,விவசாயம்,கலை, இசை,நடனம், தானம் அளித்த செய்திகள், கோயில்களின் வளர்ச்சி, சமுதாயங்களின் கட்டமைப்பு, நீதிமுறை, அன்னதான சத்திரங்கள், புராதனஆட்சிமுறை, பழமையான மனித வளர்ச்சி, போன்றவைகளையும் அறிய இங்குள்ள கல்வெட்டுசெய்திகளே ஆதாரங்களை தருகின்றன. நெல்லை பிராதான சாலையில் (பாலத்தின் மேற்புறம்) அமைந்துள்ள அப்பன்வெங்கடாஜலபதி கோயில் கல்வெட்டு கிபி.1120ல் ஆட்சி செய்த. சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சிமுதல்தொடங்குகிறது பெரும் மதில்சுவர்களுடன் கூடியஇக்கோயிலில் கிபி1226 மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஜீயர் மடத்தை நிறுவி திரிதண்டி என்பவரிடம்ஒப்படைத்து அம்மடத்துக்கு முடிவழங்கும்பெருமாள் என்றபெயர் வைத்து அதில் ஏராளமான வைணவ அடியார்களை தங்கவைத்து ஆதரவு தந்துள்ளான் . வேதம்கற்கபாடசாலைகளும்,ஆசிரியர்களையும் மாணவர்களையும் நியமித்து இம்மடத்துக்கு நிலதானங்களையும் அளித்துள்ளான் கிபி.1250ல் ஆண்ட. சுந்தரபாண்டியன் இங்கு நூல்களை சேமித்துவைக்கும் ஙாலகத்தை சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் ஏற்படுத்தியுள்ளான் பராமரிக்க நிலமும் தானம் செய்துள்ளான் மேலும் இந்த ஸ்தலத்தில் கன்னடியன் சத்திரம் அமைத்து கன்னட பிராமணர்களை குடியேற்றி அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் அன்னதானங்ளுக்கும் நிலங்களை தானமாக வழங்கி உள்ளான் கோயில் முன் வைணவர்களுக்கு அக்ரஹாரம் ஒதுக்கி கோயிலில் வேதங்கள் பாடவும் வழிவகுத்துள்ளான் இங்குஇருந்த சத்திரங்களும் கன்னடபிராமணர்களும் தற்போது இல்லை. மேலும் கல்வெட்டில் இந்த பெருமாள் பெயர் துவாரகாபதியப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பிருகுமுனிவர் அப்பனாக பாவித்து ஸ்தாபித்ததால் அப்பன் வெங்கடாஜலபதி என்று இன்றும் அழைக்கப்படுகிது.) மேலும் இந்த. கோயிலின் உற்ச்சவங்கள் ஆனிமாத திருவோணம் வருஷாபிஷேகம் புரட்டாசித்திருவோணம் மற்றும்புரட்டாசிசனிக்கிழமைகள் மார்கழிமாதம் வைகுண்ட ஏகாதசி சயனம் மற்றும் மாலை புறப்பாடு மற்றும் மார்கழி ழூலம்ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு காலைமட்டும் திருமஞ்ஞனம் மற்றும் நித்தியபூஜை. தைமாத சப்தமியில் ரதசப்தமி தீர்த்தவாரி மற்றும்மாலை ஸ்ரீனிவாஸ கல்யாணம் புறப்பாடு (உற்ச்சவ காலங்களில் மாலை வாகன புறப்பாடு உண்டு) வந்து கலந்துகொண்டு அப்பனின் அருளைப் பெற்றுச்செல்லுங்கள் திருக்கோயிலில் ஸ்வாமி அப்பன் ஸ்ரீதேவிஸ்ரீபூதேவி சன்னதிகள்தனித்தனியாகவும் ஆழ்வார்களுடன் ஸ்ரீவிஷ்வக்ஷேனர் மற்றும் ஸ்ரீபெரியநம்பிகள் மற்றும் ஸ்ரீஉடையவர் தனிசன்னதியாகவும் ஸ்ரீஆஞ்ஜனேயர் தனியாகவும் இருக்கிறார்கள்.