தல வரலாறு
ஸ்ரீ வல்ல பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் இவ்வூரின் வழியே படை நடத்திச் செல்லும் பொது மாலை வேலையின் சிவா பூசை செய்யும் பொருட்டு . சிவன் கோவிலை தேடியதாகவும் இவ்வூரில் அப்போது சிவாலயம் இல்லாததால் ஊர் மக்கள் அருகில் இருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் செய்து மண்ணுக்கு தர எத்தனித்து குளத்தில் மூழ்கிய போது கல்லாலான சிவா லிங்கத்தின் பாணப் பகுதி மட்டும் கிடைத்ததாகவும் அதனை அவர்கள் மன்னனிடம் கொடுத்த போது மன்னன் மன மகிழ்ந்து சிவபூசை செய்து முடித்த திருப்தியுடன் சென்றான் பின்னர் இவ்வூரில் சிவனுக்கு ஆலயம் கட்டினான்