தல பெருமை

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், சக்கரமல்லூர் கிராமம், அருள்மிகு திருக்கண்டீஸ்வரர் திருக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மூன்று மன்னர்கள் ஆட்சி புரிந்ததாக பதியப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கள் (கி.பி.1070-1122) மூன்றாம் இராஜேந்திரன் (கி.பி.1218-1246) மற்றும் மூன்றாம் இராஜேந்திரனின் சமகாலத்தவரான காடவராய மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஆகிய மன்னர்களால் வெட்டபட்ட கல்வெட்டுகளாகும். இத்திருக்கோயிலில் கஜபிரதிஷ்ட விமானம் அமைந்துள்ளது.