Screen Reader Access     A-AA+
அருள்மிகு மத்தியஸ்தநாதசுவாமி திருக்கோயில், Tharukapuram - 627755, தென்காசி .
Arulmigu Matheesthanatha Samy Temple, Tharukapuram - 627755, Tenkasi District [TM040520]
×
Temple History

புராண பின்புலம்

முற்காலத்தில் மனதைக் குளிர்விக்கும் அற்புத வளங்களோடு விளங்கிய இந்தப் பகுதி தாருகாவனம் எனப்பட்டது. மன்னர்களும் தவயோகிகளும் மக்களும் இளைப்பாறிச் செல்லும் எழிலார்ந்த பகுதியாக விளங்கிய இது, சேர- சோழ- பாண்டிய நாடுகளின் எல்லையில் இருந்தது. அதனால் இதைக் கைப்பற்ற மூவேந்தர்களுக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்தது. இறுதியாக தங்கள் பிரச்சினையைத் தீர்க்க வல்லவர் மாமுனியான அகத்தியர் ஒருவரே என்னும் முடிவுக்கு வந்தவர்கள், அகத்தியரைக் காண தென்திசை நோக்கிப் பயணமானார்கள். அவ்வாறு வரும்போது தாருகாவனத்தில் இளைப்பாறினார்கள். அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் நீங்கள் சம்மதித்தால் நான் மத்தியஸ்தராக இருந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன் என்றார். மூவரும் தங்களுக்குள் ஆலோசித்து, முனிவரின் தீர்ப்பை ஏற்பதாகக் கூறினர். சோழ மன்னா, நீ வாய்க்கால் பகுதிகளை வைத்துக்கொள். சேர மன்னா,...