முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன. முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி. சான்று தேவைகுறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டான்
இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே...முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன. முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி. சான்று தேவைகுறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டான்
இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே இங்கு பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வள்ளியம்மையாருக்கு தனிக் கோவிலும் அமைக்கப் பெற்றிருத்தலை காணலாம்
தெய்வானை இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள், முருகப்பெருமானின் மனைவி.