Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், Nambipuram, - 628902, தூத்துக்குடி .
Arulmigu Meenatchi Sundareshwar Temple, Nambipuram, - 628902, Thoothukudi District [TM041700]
×
Temple History

தல வரலாறு

கார்மேக சித்தர் இமய மலையில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசாமியை தரிசிக்க வந்தபோது தற்போது இத்திருக்கோவில் அமைந்திருக்கும் இடத்தில் முன்னொரு காலத்தில் அர்ஜுனா நதி ஓடி கொண்டிருந்தது அதன் கரையில் ஓய்வு எடுக்க தங்கிய சித்தருக்கு எம்பிரான் சிவபெருமான் கனவில் தோன்றி இவ்விடம் எனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறிய நியமத்தை தொடர்ந்து சித்தர் அவர்கள் மக்களிடமும் இப்பகுதி குறுநிலமன்னனிடமும் யாசகம் பெற்று கோவில் கட்டும் பணியை தொடங்கினார் பணி நிறைவுறும் முன்னே சித்தரின் இப்பூவுலகை விட்டு பிரியும் நேரத்தை உணர்ந்த காரணத்தால் திருக்கோவில் வளாகத்தில் இறைவனை தரிசித்தவண்ணம் ஜீவா சமாதி நிலையை அடைந்தார் . இதுவே அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் நம்பிபுரம் திருக்கோவிலின் திருவரலாறாகும்