அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், Kumaradiapuram - 628902, தூத்துக்குடி .
Arulmigu Balasubramaniyasamy Temple, Kumaradiapuram - 628902, Thoothukudi District [TM041702]
×
Temple History
தல வரலாறு
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி தற்பொழுது ஆலயம் அமைந்துள்ள இடத்தின் வழியாக பால் செம்பை கொண்டுவரும் போது தினமும் தானாகவே சிந்தி விழுந்தது . இதைக்கண்டு ஊர் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலை தோன்றியது . அயோத்திரெட்டி வழி தோன்றிய ஆன்மீகப் பெரியவர் பால் வண்ணரெட்டியார் என்பவர் கனவில் பால் முகம் மாறாத பாலகன் வடிவில் முருகன் தோன்றி சிறிய வேல் , விபூதி கொப்பறையுடன் சிறு பூஜை மணியும் புதைந்து இருப்பதாகவும் அவ்விடம் அதனை எடுத்தால் அஃது ஓர் சிறப்புற்ற ஆலயம் ஆகும் எனக்கூறி மறைந்தார் . இதனை ஊர் மக்களிடம் எடுத்துக்கூறி மேற்படி இடத்தை தோண்டிப்பார்க்கையில் கனவில் கூறிய பொருள்கள் அனைத்தும் இருப்பது கண்டு...சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி தற்பொழுது ஆலயம் அமைந்துள்ள இடத்தின் வழியாக பால் செம்பை கொண்டுவரும் போது தினமும் தானாகவே சிந்தி விழுந்தது . இதைக்கண்டு ஊர் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலை தோன்றியது . அயோத்திரெட்டி வழி தோன்றிய ஆன்மீகப் பெரியவர் பால் வண்ணரெட்டியார் என்பவர் கனவில் பால் முகம் மாறாத பாலகன் வடிவில் முருகன் தோன்றி சிறிய வேல் , விபூதி கொப்பறையுடன் சிறு பூஜை மணியும் புதைந்து இருப்பதாகவும் அவ்விடம் அதனை எடுத்தால் அஃது ஓர் சிறப்புற்ற ஆலயம் ஆகும் எனக்கூறி மறைந்தார் . இதனை ஊர் மக்களிடம் எடுத்துக்கூறி மேற்படி இடத்தை தோண்டிப்பார்க்கையில் கனவில் கூறிய பொருள்கள் அனைத்தும் இருப்பது கண்டு மகிழ்ந்தனர் . இந்நிலையில் இவ்விபரம் அப்போதைய எட்டையபுரம் ஜமீன்தாரரிடம் தெரிவிக்கப்பட்டு எட்டையபுரம் ஜமீன்தார் மற்றும் சுற்றுவட்டார பெருநிலக்கிழார்களும் ஆன்மீகப் பெரியோர்களும் இணைந்து தீர்மானிக்கப்பட்ட ஆலயமே இன்று கவின்மிகு அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது . இச்சிறப்புமிகு ஆலயத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் இங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது போற்றுதற்குரியதாகும் .