அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில், பெரிய காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Magaleswarar Temple, Big Kancheepuram, Big Kancheepuram - 631502, Kancheepuram District [TM042441]
×
Temple History
தல வரலாறு
கல்வியிற் கரையிலா காஞ்சி மாநகரில் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் தொன்மை வாய்ந்ததும் காஞ்சிபுராணத்தில் இடம்பெற்றதுமான இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாகாளேஸ்வரரை ஸ்ரீ காளஹஸ்தியில் வசித்து வந்த மாகாளான் என்ற பாம்பரசன் சிவபெருமான் இட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள பாப விமோசனத்திற்காக தரிசித்துப் பேறு பெற்று, திரும்பவும் காளஹஸ்திதிக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் தனிச்சிறப்பாக ராகு-கேது சிவபெருமானுடன் உள்ள திருக்கோலக்காட்சி அமைந்துள்ளது. இத்தலத்தில் பக்தர்களின் குறை நிவர்த்திக்காக ஒன்பது கிரகங்கள் நவராக்கிரகம் தனித்தனி சன்னதியில் தம்பதி சமேதராய் மிகச் சிறப்பாக அமைந்து அருள்பலிக்கின்றனர். மேலும், ராகு-கேது தனித்தனி சன்னதிக்களில் அமையப்பெற்றுள்ளது. பரிகார நிவர்த்திக்காக வரும் பக்தர்களின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்து அருள் நலம்...கல்வியிற் கரையிலா காஞ்சி மாநகரில் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் தொன்மை வாய்ந்ததும் காஞ்சிபுராணத்தில் இடம்பெற்றதுமான இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாகாளேஸ்வரரை ஸ்ரீ காளஹஸ்தியில் வசித்து வந்த மாகாளான் என்ற பாம்பரசன் சிவபெருமான் இட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள பாப விமோசனத்திற்காக தரிசித்துப் பேறு பெற்று, திரும்பவும் காளஹஸ்திதிக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் தனிச்சிறப்பாக ராகு-கேது சிவபெருமானுடன் உள்ள திருக்கோலக்காட்சி அமைந்துள்ளது. இத்தலத்தில் பக்தர்களின் குறை நிவர்த்திக்காக ஒன்பது கிரகங்கள் நவராக்கிரகம் தனித்தனி சன்னதியில் தம்பதி சமேதராய் மிகச் சிறப்பாக அமைந்து அருள்பலிக்கின்றனர். மேலும், ராகு-கேது தனித்தனி சன்னதிக்களில் அமையப்பெற்றுள்ளது. பரிகார நிவர்த்திக்காக வரும் பக்தர்களின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்து அருள் நலம் வழங்கி வருகின்றனர்.