Arulmigu Alagiya Thiruchitrambalanathar Temple, பேரூர் - 641010, கோயம்புத்தூர் .
Arulmigu Alagiya Thiruchitrambalanathar Temple, Perur - 641010, Coimbatore District [TM042604]
×
Temple History
தல வரலாறு
ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை அடைந்து தரிசித்து விட்டு தில்லைச் சிதம்பரம் சென்று அங்குள்ள நடராஜப் பெருமானை துதித்துப்பாடும் பதிகத்தின் கடைசியில் பேரூரா பெருமானை புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே என்று பாடினார். உடனே தில்லைவாழ் அந்தணர்கள் இத்தில்லைக்கு நிகரான வேறொரு தலம் உண்டா என்று சுந்தரமூர்த்தி நாயனாரிடம் கேட்டனர். இக்கனகசபையிலே தாண்டபம் செய்வது போல் திருப்பேரூர் ரஜதஸபையில் சிவபிரான் தாண்டவம் செய்கிறார்என்று பேரூரை குறிப்பிட்டார். தில்லைவாழ் அந்தணர்கள் பேரூரையடைந்து காஞ்சி மாநதியில் நீராடி ஸ்ரீ பட்டிப்பெருமானையும் ஸ்ரீ பச்சைநாயகியாரையும் திரிசித்து அரசம்பலவாணரையும் தரிசித்து அரசம்பலவாணர் திருக்கோயிலுக்கு தென் திசையில் ஆலயம் ஒன்று நிர்மானித்து லிங்கப்ரதிஷ்டை செய்து சில காலம் தங்கியிருந்து பூஜித்து பின்பு கீழைச் சிதம்பரமாம் தில்லையை அடைந்தனர்....ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை அடைந்து தரிசித்து விட்டு தில்லைச் சிதம்பரம் சென்று அங்குள்ள நடராஜப் பெருமானை துதித்துப்பாடும் பதிகத்தின் கடைசியில் பேரூரா பெருமானை புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே என்று பாடினார். உடனே தில்லைவாழ் அந்தணர்கள் இத்தில்லைக்கு நிகரான வேறொரு தலம் உண்டா என்று சுந்தரமூர்த்தி நாயனாரிடம் கேட்டனர். இக்கனகசபையிலே தாண்டபம் செய்வது போல் திருப்பேரூர் ரஜதஸபையில் சிவபிரான் தாண்டவம் செய்கிறார்என்று பேரூரை குறிப்பிட்டார். தில்லைவாழ் அந்தணர்கள் பேரூரையடைந்து காஞ்சி மாநதியில் நீராடி ஸ்ரீ பட்டிப்பெருமானையும் ஸ்ரீ பச்சைநாயகியாரையும் திரிசித்து அரசம்பலவாணரையும் தரிசித்து அரசம்பலவாணர் திருக்கோயிலுக்கு தென் திசையில் ஆலயம் ஒன்று நிர்மானித்து லிங்கப்ரதிஷ்டை செய்து சில காலம் தங்கியிருந்து பூஜித்து பின்பு கீழைச் சிதம்பரமாம் தில்லையை அடைந்தனர். அவர்களால் நிர்மானிக்கப்பட்ட கோயில் அழகிய திருச்சிற்றம்பலம் என்வும் ஸ்வாமி அழகிய திருச்சிற்றம்பலமுடையார் எனவும் பெயராயிற்று.