அருள்மிகு அதிமூர்க்கம்மன் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் .
Arulmigu Athimoorkkamman Temple, Perur - 641010, Coimbatore District [TM042607]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு அதிமூர்க்கம்மன் திருக்கோயில் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும். இக்கோயில் பேரூர் பெரிய கோயிலுக்கு வடமேற்கு திசையில் உள்ளது. சிவபெருமானுக்கு போட்டியாக காளி நடனமாடியபோது பெருமான் உத்ரவதாண்டவம் செய்கிறார். அத்தாண்டவத்தை செய்ய முடியாத காளி தோற்றுப்போகிறாள். அந்த பாப நிவர்த்திக்காக காளி அதிமூர்க்கம்மன் என்ற பெயரோடு பேரூரில் ஸ்ரீ பட்டிப்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்க வேண்டி தவம் செய்கிறாள். இறைவன் கோமுனி, பட்டிமுனி, காலவர் முதலியரோடு அதிமூர்க்கம்மனுக்கு ஆனந்த தாண்டவத்தை அருள்கிறார். மேலும் காளி இத்தாண்டவத்தை எப்பொழுதும் எனக்கு முதன்மையாக்க வேண்டும் என இறைவனிடம் வேண்ட இறைவனும் அவ்வாறே ஆகுக என அருள்கிறார். இதனால் இறைவனுக்கும், உமையம்மைக்கும் ஊடல் ஏற்பட இறைவன் உமையம்மைக்கு...அருள்மிகு அதிமூர்க்கம்மன் திருக்கோயில் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும். இக்கோயில் பேரூர் பெரிய கோயிலுக்கு வடமேற்கு திசையில் உள்ளது. சிவபெருமானுக்கு போட்டியாக காளி நடனமாடியபோது பெருமான் உத்ரவதாண்டவம் செய்கிறார். அத்தாண்டவத்தை செய்ய முடியாத காளி தோற்றுப்போகிறாள். அந்த பாப நிவர்த்திக்காக காளி அதிமூர்க்கம்மன் என்ற பெயரோடு பேரூரில் ஸ்ரீ பட்டிப்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்க வேண்டி தவம் செய்கிறாள். இறைவன் கோமுனி, பட்டிமுனி, காலவர் முதலியரோடு அதிமூர்க்கம்மனுக்கு ஆனந்த தாண்டவத்தை அருள்கிறார். மேலும் காளி இத்தாண்டவத்தை எப்பொழுதும் எனக்கு முதன்மையாக்க வேண்டும் என இறைவனிடம் வேண்ட இறைவனும் அவ்வாறே ஆகுக என அருள்கிறார். இதனால் இறைவனுக்கும், உமையம்மைக்கும் ஊடல் ஏற்பட இறைவன் உமையம்மைக்கு தன்மேனியில் சரிபாதி தனது தாண்டவத்தை எப்பொழுதும் தரிசித்திருப்பாய் என சமாதானப்படுத்துவதாக பேரூர் புராணம் எடுத்துரைக்கிறது. மேலும் இந்நிகழ்வு பங்குனி உத்திரத் திருவிழாவில் பத்தாம் திருநாள் அன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது