Arulmigu Theerthakumarasamy Temple, அரச்சலூர் - 638115, ஈரோடு .
Arulmigu Theerthakumarasamy Temple, Arachalur - 638115, Erode District [TM042625]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு அறச்சாலம்மன் வகையறா திருக்கோயிலில் ஒன்றான அருள்மிகு நாகமலை தீர்த்தகுமாரசுவாமி திருக்கோயில் அறச்சலூரிலிருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல 485 திருப்படிகள் உள்ளது. ஒவ்வொரு வாரம் செவ்வாய், வெள்ளி , ஞாயிறு மற்றும் அமாவாகை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி ஆகிய நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை நாட்களில் வேங்கை மரத்தேர் உலா நடைபெற்று வருகிறது.
படிவழியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழி பாதையில் பெரிய நாகர் சிற்பம் ஒன்று ஒரே கல்லினால் ஆன பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது....அருள்மிகு அறச்சாலம்மன் வகையறா திருக்கோயிலில் ஒன்றான அருள்மிகு நாகமலை தீர்த்தகுமாரசுவாமி திருக்கோயில் அறச்சலூரிலிருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல 485 திருப்படிகள் உள்ளது. ஒவ்வொரு வாரம் செவ்வாய், வெள்ளி , ஞாயிறு மற்றும் அமாவாகை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி ஆகிய நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை நாட்களில் வேங்கை மரத்தேர் உலா நடைபெற்று வருகிறது.
படிவழியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழி பாதையில் பெரிய நாகர் சிற்பம் ஒன்று ஒரே கல்லினால் ஆன பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இராகு, கேது பெயர்ச்சி அன்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள். மலைக்கோயிலில் கிருத்திகை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். தீர்த்த குமாரசாமி மலைக்கோயில் மரத்தேரில் கிருத்திகை தோறும் திருக்கோயிலில் உலா வருகிறது. பக்தர்களுக்கு மலைக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் நிழல்தரும் மண்டபம் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படித் திருக்கோயிலின் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல தற்போது படிவழிப் பாதை மட்டுமே உள்ள நிலையில் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மலைக்கோயிலுக்குச் சென்று வர ஏதுவாக தார்சாலை புதியதாக அமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.