தல வரலாறு
ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் தென்திசை நெடுஞ்சாலையில் 22 வது கிலோ மீட்டர் தூரத்தில் அறச்சலூர் கிராமத்தில் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்று பக்தர்கள் அதிகளவில் தரிசித்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் சனீஸ்வர அர்ச்சனை, இராகு, கேது அர்ச்சனை செய்யப்படுகிறது. புற்றிடங்கொண்டீஸ்வரர் சுயம்பு வடிவில் கிழக்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பாகும். பூலோக நாயகி அம்மன் அருகில் தனிக்கோயிலாக அமைந்துள்ளது. திருக்கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அம்மன் சன்னதியும் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. சைவம், வைணவமும் ஒரே திருக்கோயிலில் வளாகத்தில் உள்ளது தனிச்சிறப்பாகும்.