Screen Reader Access     A-AA+
Arulmigu Sundaramoorthi Nayanar Temple, - 641654, திருப்பூர் .
Arulmigu Sundaramoorthi Nayanar Temple, Avinashi - 641654, Tiruppur District [TM042669]
×
Temple History

தல வரலாறு

இவ்வூரில் வாழ்ந்த கங்காதரசர்மா வேதபதுமை தம்பதிகளின் குமாரன் அவிநாசிலிங்கம் மற்றும் அவனது நண்பர் தாமரைக்குளம் என்னும் தடாகத்தில் நீராட சென்றபோது அவிநாசிலிங்கத்தை முதலை விழுங்கியது. மூன்றாண்டுகளுக்கு பின் அவிநாசிலிங்கத்தின் நண்பனுக்கு உபநயனம் நடந்தது. அதுசமயம் அவிநாசியப்பரை வழிபட சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது பரிவாரங்களுடன் திருப்புக்கொளியூர் அடைந்தபோது ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. அவிநாசிலிங்கம் பெற்றோர்களை சந்தித்து விவரமறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் குளக்கரைக்கு சென்று எற்றான் மறக்கான் என்று தொடங்கும் தேவாரப் பதிகம் பாடி மூன்றாண்டுக்கு முன் முதலையுண்ட பாலகனை மூன்றாண்டு வளர்ச்சியுடன் வரவழைக்க அற்புதம் நடத்திய தலமாகும். ஆதலால் சுந்தரமூர்த்தினாயனார்க்கு தனியாக திருக்கோவில் உள்ளது.