தல வரலாறு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், எரவாங்குடி கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆதலால் அக்கிராம மக்கள் அங்குள்ள ஏரியில் கிணறு ஒன்று தோண்டினார்கள். அப்போது முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அச்சிலையை அந்த ஏரிக்கரையிலேயே நாட்டு ஓடு வேய்ந்த மேற்கூரை கொண்ட சிறிய கட்டிடத்தில் பிரதிஷ்டை செய்து கிராமமக்கள் வழிபாடு செய்து வந்தனர். சுமார் 50 வருடங்களுக்கு பின்னர் திருப்பணி செய்து 06.02.2014 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.