தல வரலாறு
இத்திருத்தலம் பழமையும் பெருமையும் வாய்ந்தது. அருணகிரி நாதரால் திருப்புகழில் பாடப்பட்டுள்ளது. திருமால் மோகினி அவதாரத்தில் இவ்வவூரில் அருள்புரியும் ஈசனை நோக்கி தவம் புரிந்து அருள் பெற்றதால் ஈசனுக்கு ஸ்ரீதிருமுகிலீஸ்வரர் என்று பெயர் வழங்கலாயிற்று இந்த ஸ்தல ஈசனின் மேல் தினமும் மாலையில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுமாறு அமைந்துள்ளது.இதனால் தினமும் ஸ்ரீசூரியபகவானே ஈஸ்வரனை வழிபடுவதாக ஸ்தல வரலாறுகள் கூறுகின்றன