அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், கொண்டித்தோப்பு, சென்னை - 600079, சென்னை .
Arulmigu Kasiwisvanatha Swamy Temple, Kondithoppu, Chennai - 600079, Chennai District [TM000446]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாத தேவஸ்தானம், சென்னை, கொண்டித்தோப்பில் உள்ளது. இது சென்னையில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 250 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இக்கோயிலில் மூலவர் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்பாள் மற்றும் அன்னபூரணி அம்பாளுடன் எழுந்தருளி உள்ளார். மூலவரின் பின்புறம் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். காசி விஸ்வநாதரும், ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமியும் ஒரே இடத்தில் இருப்பது விசேஷமான ஒன்றாகும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் மேலும் விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், அருள்மிகு நடராஜர், ஐயப்பன் மற்றும் நவகிரஹ சன்னதிகளும் உள்ளன.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், ஆணி திருமஞ்சனம், நவராத்திரி, மாணிக்கவாசகர் உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன.
மேலும், பங்குனி மாதம்...அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாத தேவஸ்தானம், சென்னை, கொண்டித்தோப்பில் உள்ளது. இது சென்னையில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 250 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இக்கோயிலில் மூலவர் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்பாள் மற்றும் அன்னபூரணி அம்பாளுடன் எழுந்தருளி உள்ளார். மூலவரின் பின்புறம் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். காசி விஸ்வநாதரும், ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமியும் ஒரே இடத்தில் இருப்பது விசேஷமான ஒன்றாகும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் மேலும் விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், அருள்மிகு நடராஜர், ஐயப்பன் மற்றும் நவகிரஹ சன்னதிகளும் உள்ளன.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், ஆணி திருமஞ்சனம், நவராத்திரி, மாணிக்கவாசகர் உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன.
மேலும், பங்குனி மாதம் 10 - 14 தேதிகளில் சூரிய பூஜையும் நடைபெறுகிறது. சூரிய பூஜையின்போது, காலையில் சூரிய பகவான் மூலவர் மீது தன் கிரணங்களால் வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக பக்தர்களால் போற்றப்படுகிறது.