Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை - 600014, சென்னை .
Arulmigu Periyapalayathamman Temple, Royapetta, Chennai - 600014, Chennai District [TM000047]
×
Temple History

தல வரலாறு

அன்னையின் கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது. இக்கோயில் தோன்றியதைப் பற்றிய வரலாறுகள் சரிவர கிடைக்கவில்லை. ஆனால் இக்கோயில் ஆரம்பத்தில் தென்னந்தோப்புக்கிடையில் சிறியதாக இருந்ததாம். அப்போது இவ்வூர் வாசியான நல்லத்தம்பி பிள்ளை என்பவருடைய தோட்டங்களை ஓர் ஆங்கிலேயர் துரை எடுத்துக் கொள்ள முயன்றாராம். அம்பிகையின் பக்தரான நல்லதம்பி பிள்ளை அன்னையிடம் முறையிட, அன்னை அந்த ஆங்கிலேயருக்கு அம்மை நோயைத் தந்தாளாம். அதன் பின்னர் ஆங்கிலேயர் தோட்டத்தைக் கைப்பற்றும் எண்ணத்தை விட்டு அன்னையை வணங்கி வழிப்பட்டாராம். அம்மை நோய் நீங்க அதன் நன்றிக் கடனாக 19-1-1794 ஆம் நாளில் ஒரு காணி நிலத்தைத் தானமாக அளித்ததை தெரிந்தெடுக்கப்பட்ட ஆவணங்கள் சிசிசி-என்.13 1935 எல் செய்தி வெளியாகி இருக்கின்றது....