Arulmigu Kothandaramar Temple, Kaspa Ambur - 635802, Thirupathur District [TM004841]
×
Temple History
தல வரலாறு
இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக பல கோடி இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் ...இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக பல கோடி இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு