கணியனூர் அ/மி காமாட்சியம்பாள் சமேத அணிகோபநாதீஸ்வரர் திருக்கோயிலின் முப்பட்டை ஜகதியில் கல்வெட்டுக்கள் இருந்துள்ளன அவைகள் பெரும்பாலும் படிக்க இயலாதவாறு சிதைவடைந்து விட்டது மற்றும் கல்வெட்டுக்கள் மீது சிமெண்ட், சுண்ணம் பூசப்பட்டுள்ளது. எனினும், இக்கோயிலின் கல்வெட்டுக்கள் இந்தியத் தொல்லியல் துறையின் 1940-41 ஆம் ஆண்டின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வரிசை எண் 2 மற்றும் 3-ல் -1940-41, .-23 குறிப்பிட்டுள்ளது. அவ்விரு கல்வெட்டுகளும் முதலாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டில் கி.பி 1097-ல் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் என்பதையும், அதன் மூலம் இக்கோயில் 926 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.
முதலாவது கல்வெட்டில் இருந்து தற்பொழுது கணியனூர் என அழைக்கப்படும் இவ்வூர் சோழர் காலத்தில் படூவூர் கோட்டதின் பெருந்திமிரி நாட்டில் இருந்த ஒரு பிரம்மதேய...கணியனூர் அ/மி காமாட்சியம்பாள் சமேத அணிகோபநாதீஸ்வரர் திருக்கோயிலின் முப்பட்டை ஜகதியில் கல்வெட்டுக்கள் இருந்துள்ளன அவைகள் பெரும்பாலும் படிக்க இயலாதவாறு சிதைவடைந்து விட்டது மற்றும் கல்வெட்டுக்கள் மீது சிமெண்ட், சுண்ணம் பூசப்பட்டுள்ளது. எனினும், இக்கோயிலின் கல்வெட்டுக்கள் இந்தியத் தொல்லியல் துறையின் 1940-41 ஆம் ஆண்டின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வரிசை எண் 2 மற்றும் 3-ல் -1940-41, .-23 குறிப்பிட்டுள்ளது. அவ்விரு கல்வெட்டுகளும் முதலாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டில் கி.பி 1097-ல் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் என்பதையும், அதன் மூலம் இக்கோயில் 926 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.
முதலாவது கல்வெட்டில் இருந்து தற்பொழுது கணியனூர் என அழைக்கப்படும் இவ்வூர் சோழர் காலத்தில் படூவூர் கோட்டதின் பெருந்திமிரி நாட்டில் இருந்த ஒரு பிரம்மதேய ஊர் என்பதும் அக்காலத்தில் இவ்வூர் கனிக்காய் நல்லூர் என அழைக்கப்பட்ட வீராதி வீக்ரமச் சதுர்வேதி மங்கலம் என பெயரிடப்பட்டிருந்தது என்பதையும் அறிய முடிகிறது.