Screen Reader Access     A-AA+
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், இரண்டாவது அக்ரஹாரம் - 636001, சேலம் .
Arulmigu Kasiviswanathar Temple, Second Agraharam, Salem - 636001, Salem District [TM004860]
×
Temple History

தல பெருமை

உலகம் போற்றும் சிறப்புடைய மாங்கனி மாநகர் எனும் சேலம் மாநகரில் புகழ் வாய்ந்த அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவநேசன் என்ற சிவச்சீலரால் கங்கை பாயும் காசி புண்ணிய தலத்தில் இருந்து 400 ஆண்டுகளுக்கு முன்பு கொணர்ந்து அமைக்கப்பட்ட சிவலிங்கமே ஸ்ரீ காசி விசுவநாதர் ஆவார். மேலும் சக்தி நிலையை உயர்த்தி ஸ்ரீசக்ர கர்ண தாடங்கத்தை செவிகளிலே தாங்கி கருணையே வடிவவாக கொண்டு அனைவரையும் வாழ்விக்கின்ற அருட்சக்தி ரூபமாய் எல்லா உலகிற்கும் நாயகியாகிய நவசக்தி வடிவமாகி திருவருள் நிறைந்து ஸ்ரீ காசி விசாலாட்சி என்னும் திருநாமத்தில் அருள்பாலித்து வருகின்றாள்.