Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், Town Bus Stand, Salem - 636001, சேலம் .
Arulmigu Kottai Mariamman Temple, Town Bus Stand, Salem - 636001, Salem District [TM004861]
×
Temple History

தல வரலாறு

சேலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை மாரியம்மன் . அம்மாப்பேட்டை, மாரியம்மன் செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன் சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன் குகை, மாரியம்மன் அன்னதானப்பட்டி, மாரியம்மன் பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம். சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும்...

புராண பின்புலம்

பண்டையத் தமிழகம் பல்வேறு மண்டலங்களாய் பிரிந்து ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு அமைந்த மண்டலங்களுள் கொங்கு மண்டலமும் ஒன்று. தற்போது உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதே கொங்கு நாடு, கொங்குநாடு மலை வளமும், மனவளமும் நிறைந்த நாடு, புலவரும், புரவலரும் சிறந்த நாடு, தமிழ் மனம் கமழ விளங்கிய நாடு, இதன் கீழ் திசையில் புகழ் நிறைந்த பகுதியே சேலம் மாநகரம் ஆகும். சேலம் மாநகரத்தின் மத்தியில், சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், சேலம் தொடர்வண்டி சந்திப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்திருக்கின்றது. கோட்டைப் பகுதியின் ஈசான திசையில் (வடகிழக்கு திசை) காவல் தெய்வமாக நின்று மக்களை...