Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், கன்னம்பள்ளி, கனகமுட்லு - 635002, கிருஷ்ணகிரி .
Arulmigu Venkatramana Swamy Temple, Kannampalli, Kanakamutulu - 635002, Krishnagiri District [TM004925]
×
Temple History

தல பெருமை

மலைகள் சூழ்ந்த பிரதேசமாகிய கிருஷ்ணகிரியில், மகாலட்சுமி தாயர் தவமிருந்து புனிதப்படுத்திய புண்ணிய பூமியில் முன்பு காடுகள் மண்டியிருந்தன. இக்காடுகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள இடைச்சிறுவர்களின் வழக்கம். இச்சிறுவர்களில் ஒருவனது ஒரு பசுமாடு மட்டும் தினசரி அடர்ந்த கானகத்தின் ஊடே செல்வதும், பால் வடிந்த மடியுடன் திரும்புவதும் இடையனை கலவரப்படுத்தியது. இதன் காரணம் அறிய ஒருநாள் பசுமாட்டினை தொர்ந்து சென்ற சிறுவன் கண்ட காட்சி அவனை திகைப்பில் ஆழ்த்தியது, ஓங்கி வளர்ந்த புற்றின் மீது தானாக பால் சுரக்க அவனது மாடு தெய்வீக அமைதியுடன் நின்றிருந்தது. இதனை கண்ட சிறுவன் திரும்ப ஓடிவந்து ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க, அது சமயம் அசரீரி மூலம் வெங்கடரமண சுவாமி சுயம்பு வடிவில் புற்றினுள் எழுந்தருளியிருப்பது...