அருள்மிகு செங்கச்சேரி அம்மன் திருக்கோயில், குரோம்பேட்டை, சென்னை - 600044, செங்கல்பட்டு .
Arulmigu Sengacherriyamman Temple, Chrompet, Chennai - 600044, Chengalpattu District [TM000496]
×
Temple History
தல பெருமை
தல வரலாறு
ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன் குமிழ் கிராமத்தை சேர்ந்த வழிவந்த ஜமீந்தார் ஒருவர் ஸ்ரீ செங்கச்சேரி அம்மனை தன் குலதெய்வமாக வழிபட்டு வந்ததாக தெரிகிறது,இன்றும் கோவிலை அடுத்த பகுதிகளில் 1 அடி நீளமும் 4 அங்குல கனமும் உள்ள செங்கற்களை காணலாம். அவர்களுக்கு பிறகு வந்த சிலர் இக்கோவிலுக்கு 600 ஆண்டுகளுக்கு முன் 24 சென்ட் நிலத்தை வழங்கி அதற்கான நகலை பஞ்சாயத்து சாவடியில் வைத்துள்ளார்கள். சுமார் 90 வருடங்களுக்கு முன்பிருந்து ராயப்பேட்டை பூட்டுக்கார பரம்பரையினர் இந்த ஆலயத்தை பராமரித்து வந்ததாக தெரிகிறது.பிற்பாடு திரு ஜோதி முதலியார் ,மற்றும் திரு மஹாலிங்கம் அய்யரின் தந்தையார் இவ்வாலயத்தை பராமரித்தனர்.பிரகு பாரி கம்பெனி உத்யோகஸ்தர்கள் ஆலயத்திக்கு ஒரு கீற்று கொட்டகை போட்டு கொடுத்தார்கள். பிறகு...தல வரலாறு
ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன் குமிழ் கிராமத்தை சேர்ந்த வழிவந்த ஜமீந்தார் ஒருவர் ஸ்ரீ செங்கச்சேரி அம்மனை தன் குலதெய்வமாக வழிபட்டு வந்ததாக தெரிகிறது,இன்றும் கோவிலை அடுத்த பகுதிகளில் 1 அடி நீளமும் 4 அங்குல கனமும் உள்ள செங்கற்களை காணலாம். அவர்களுக்கு பிறகு வந்த சிலர் இக்கோவிலுக்கு 600 ஆண்டுகளுக்கு முன் 24 சென்ட் நிலத்தை வழங்கி அதற்கான நகலை பஞ்சாயத்து சாவடியில் வைத்துள்ளார்கள். சுமார் 90 வருடங்களுக்கு முன்பிருந்து ராயப்பேட்டை பூட்டுக்கார பரம்பரையினர் இந்த ஆலயத்தை பராமரித்து வந்ததாக தெரிகிறது.பிற்பாடு திரு ஜோதி முதலியார் ,மற்றும் திரு மஹாலிங்கம் அய்யரின் தந்தையார் இவ்வாலயத்தை பராமரித்தனர்.பிரகு பாரி கம்பெனி உத்யோகஸ்தர்கள் ஆலயத்திக்கு ஒரு கீற்று கொட்டகை போட்டு கொடுத்தார்கள். பிறகு திரு தண்டபானி அய்யர் அவர்கள் இக்கோவிலுக்கு கல் கட்டிடம் எழுப்பி ஒரு விமானத்தையும் கட்டினார். பிறகு 1976 ம் ஆண்டு ஆடி மாத உற்சவ கமிட்டி ஸ்தாபிதம் ஆகி, ஆடி மாதம் உற்சவத்தை நிகழ்த்திகொண்டு வந்தார்கள். 1976 ம் வருடம் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று நிர்வாகத்தை ஆடி மாத உற்சவ கமிட்டியார் மேற்கொண்டனர். அன்று முதல் பக்த கோடிகளின் பூரண ஒத்துழைப்புடனும், பொருளுதவியுடனும் ஆலயம் நாளுக்குநாள் வளர்ச்சி பெற்று ஸ்ரீ செங்கச்சேரி அம்மன் புகழ் குரோம்பேட்டை மட்டுமல்லாது வெளியூர்களிலும் பரவத்தொடங்கியது.12/4/78 அன்று ஜகத்குரு பத்ரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சகடபுரம் சங்கராசார்ய ஸ்ரீ ராமச்சந்திரானந்த தீர்த்த ஸ்வாமிகள் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த நன்னாளில் இவ்வாலயத்தில் ஸ்ரீ வலம்புரி வினாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ துர்கை, ஸப்த கன்னிகைகள் மற்றும் நாக தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் ஆலயம் மேலும் சிறப்பும் கீர்த்தியும் பெற்று பக்தர்களின் விருப்பத்தை ஏற்று ஸ்ரீ கைலாசநாதர்,ஸ்ரீ ஆனந்தவல்லி, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ குருவாயுரப்பன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி, நவக்கிரகங்கள் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் முதலான மூர்த்திகளுக்கு இவ்வாலயத்தில் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டது. 30/3/1979 அன்று மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆலய ஸ்தல விருட்சம்- நாவல்மரம்