தல பெருமை

கொங்கு நாட்டு பல தலங்களுள் இதுவும் ஒன்று. வருடந்தோறும் பண்டிகை நடக்கும்பொழுது பழைய கம்பத்தை எடுத்து விட்டு புதிய கம்பத்தை கோவில் முன்பு நடுவது வழக்கமாக இருந்து வருகிறது. வருடம் முழுவதும் அம்மனுக்கு கம்பம் உள்ள திருக்கோவிலாகும். மேற்படி திருக்கோவிலில் அருள்மிகு மாரியம்மன் மூலதெய்வமாக விளங்கிவருகிறது. இத்திருக்கோவிலில் குறிப்பிடும் படியான தொல்லியல் பதிவுகள் ஏதுமில்லை. இத்திருக்கோவிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, 8.11.2000 ல் கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படித் திருக்கோவில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோவிலாகும்.