Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமாரஸ்வாமிபேட்டை, Dharmapuri - 636701, தர்மபுரி .
Arulmigu Sivasubramaniya Swamy Temple, Kumaraswamypettai, Dharmapuri - 636701, Dharmapuri District [TM005008]
×
Temple History

தல பெருமை

வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி ஈசான்ய பாகம் தாழ்ந்த கிழக்கு பாகத்தில் குளமும், வடக்கு திசையில் ராமக்காள் ஏரியும் உள்ளது. கிழக்கு வாசலில் இராஜகோபுரம் மிகவும் பெலிவுடன் உயர்ந்தும் காணப்படுகிறது. மேற்கு வாசல் கோபுரம் உயர்ந்தும் காணப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு நுழையும் போது சிறிய தேரும், பெரிய தேரும் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. ஆதியில் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பூண்டி கலசப்பாக்கம் என்னும் ஊரில் வசித்து வந்தவர்களும் திருவண்ணாமலையை ஆண்ட வள்ளால மகராஜாவின் மெய்காவல் படையைச் சார்ந்த கைக்கோலப்படையினரான ஆறு குடும்பங்கள் தருமபுரியில் உள்ள குமாரசாமிப்பேட்டைக்கு காவடியுடன் வந்திறங்கி சதுர்முகவேல் நட்டுஇத்திருக்கோயிலை ஸ்தபித்தனர். மோழவீட்டு முருக முதலியாரால்ஸ்தாபிக்கப்பட்ட இத்திருக்கோயில் மூலஸ்தானம் முதல் கொடி மண்டபம் வரை அவர் வழியினரான திரு.நஞ்சப்பமுதலியார்,...