கொங்கு நாட்டில் அரசாண்டவர்களில் சங்க காலத்தை சேர்ந்த அதியர் என்ற குடியினர் குறிப்பிட்டத்தக்கவர்கள் இவர்களில் மிகவும் புகழ்பெற்ற வேந்தர் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர், இவர் தகடூர் என்ற நகரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தர்.
இந்த புராதன தகடூரோ இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி என்ற நகரமாகும். மேலும் தர்மதேவர் தவம் இருந்ததால் தருமபுரி என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தருமபுரி நகரம், சேலம் பெங்களூர் நெடுங்சாலையில் சேலத்தில் இருந்து 68 கீலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
தருமபுரி நகரத்தின் கோட்டை என அழைப்படும பகுதியில் அமைந்துள்ளது. தான் மல்லிகர்ஜுனேஸ்வரர் ஆலயம், பாமர மக்களால் ஈஸ்வரன் கோயில், கமாட்சி அம்மள் கோயில் என்ற பெயர்களால் போற்றப்படுகிறது....கொங்கு நாட்டில் அரசாண்டவர்களில் சங்க காலத்தை சேர்ந்த அதியர் என்ற குடியினர் குறிப்பிட்டத்தக்கவர்கள் இவர்களில் மிகவும் புகழ்பெற்ற வேந்தர் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர், இவர் தகடூர் என்ற நகரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தர்.
இந்த புராதன தகடூரோ இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி என்ற நகரமாகும். மேலும் தர்மதேவர் தவம் இருந்ததால் தருமபுரி என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தருமபுரி நகரம், சேலம் பெங்களூர் நெடுங்சாலையில் சேலத்தில் இருந்து 68 கீலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
தருமபுரி நகரத்தின் கோட்டை என அழைப்படும பகுதியில் அமைந்துள்ளது. தான் மல்லிகர்ஜுனேஸ்வரர் ஆலயம், பாமர மக்களால் ஈஸ்வரன் கோயில், கமாட்சி அம்மள் கோயில் என்ற பெயர்களால் போற்றப்படுகிறது.
ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்டு ஸ்ரீ சைலத்தைஒட்டிய பாணலிங்கத்தலம் எனப் போற்றப்படும் ஆலயம், துர்வாசர் கௌசிகர், காசியபர், அகத்தியர், பாரத்வாஜர் போன்ற ஐந்து முனிவர்களாலும் இந்திரன் அக்ளி, எமன், கிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசனான் எனபபப்டும் அஷ்டதி பாலகர்களாலும் பஞ்ச பாண்டவர்களாலும், ஐராவதம் என்ற தேவயானையாலும் யோகநரசிம்மர், ராமர் ஹயக்ரீவர், கிருஷ்ணன் ஆகியவர்களாலும் வழிபாடு செய்யப்பட்ட தலம் ஆகும்.