புராண பின்புலம்

இத்திருக்கோயில் தருமபுரி நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வே.முத்தம்பட்டி செல்லும் வழியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 70 அடி உயரம் உடைய மிகப் பெரிய பாறையின் அடியில் அப்பாறையை ஒட்டி செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சுவாமி அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆஞ்சநேயசுவாமி நேர்முகத்துடனும் வாலில் மணி வடிவத்துடனும் காணப்படுவதினால் வியாசராய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வந்ததாக கருதப்படுகின்றது.