அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், எழும்பூர், சென்னை - 600008, சென்னை .
Arulmigu Selva Vinayagar Temple, Egmore, Chennai - 600008, Chennai District [TM000052]
×
Temple History
தல வரலாறு
சென்னை எழும்பூரில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மேற்கிலும், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வடக்கிலும், பூந்தமல்லிநெடுஞசாலைக்கு தெற்கிலும், கெங்குரெட்டி சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாக தெரியவருகிறது. மேற்கே ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏரியின் அருகில் ரயில் பாதையும், சேத்துப்பட்டு ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த ஏரி தண்ணீர் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அதனை தடுக்க ஏரியின் கரையில் ஒரு விநாயகர் ஆலயம் எழுப்பினர். அதன்பின்னர் ஏரி வெள்ளம் ...சென்னை எழும்பூரில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மேற்கிலும், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வடக்கிலும், பூந்தமல்லிநெடுஞசாலைக்கு தெற்கிலும், கெங்குரெட்டி சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாக தெரியவருகிறது. மேற்கே ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏரியின் அருகில் ரயில் பாதையும், சேத்துப்பட்டு ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த ஏரி தண்ணீர் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அதனை தடுக்க ஏரியின் கரையில் ஒரு விநாயகர் ஆலயம் எழுப்பினர். அதன்பின்னர் ஏரி வெள்ளம் புகுந்து பயிர் அழிவது விநாயகர் அருளால் தடுக்கப்பட்டது என முன்னோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழி சுழ் உலகின் அன்பர் பெருமக்களுக்கு இன்ப நிலை அளிப்பவர் விநாயக பெருமான். நினைத்த மாத்திரித்திலே சகல விக்னங்களையும் போக்கி வேண்டிய வரம் அளிக்கும் வல்லமை பொருந்தியர் என்ற சிறப்புக்குரிய திருக்கோயிலாகும்.