ஆலய அமைவிடம்:
இவ்வாலயம் தருமபுரி நகர், குமாரசாமிப்பேடை, பழைய தெற்கு ரயில்வே ரோடுக்கு அருகில் அமைந்துள்ளது.
ஆலய அமைப்பு:
இவ்வாலயம் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இப்பகுதி மூத்தவர்கள் கூறுகின்றனர். இவ்வாலயம் சுமார் 7,500 ச.அடி பரப்பில் அருள்மிகு செல்லியம்மன் சன்னதி, அருள்மிகு மாரியம்மன் சன்னதி, நவகிரக சன்னதி என அமைந்துள்ளது.
கும்பாபிஷேகம்:
மாரியம்மன், செல்லியம்மன் கோயில் மேல்தளங்கள் புதியதாக அமைக்கப்பட்டு தரை மொசைக் போடப்பட்டு, புதியதாக மின்சார இணைப்புகள் அமைத்து உருவசிலையே இல்லாத செல்லியம்மனுக்கு புதிய உருவசிலை அமைத்து அரசமரத்தடி பிள்ளையார் அமைத்து, நவகிரகங்கள் அமைக்கப்பட்டு 04.02.2004 புதன்கிழமை அன்று கோயிலுக்கு கடைசியாக குடமுழுக்கு வெகுசிறப்புடன் செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருக்கோயிலுக்கு மராமத்து பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் தரைதளம் அமைக்கும் பணிகள் சுமார் 28.00 இலட்சம் செலவில்...ஆலய அமைவிடம்:
இவ்வாலயம் தருமபுரி நகர், குமாரசாமிப்பேடை, பழைய தெற்கு ரயில்வே ரோடுக்கு அருகில் அமைந்துள்ளது.
ஆலய அமைப்பு:
இவ்வாலயம் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இப்பகுதி மூத்தவர்கள் கூறுகின்றனர். இவ்வாலயம் சுமார் 7,500 ச.அடி பரப்பில் அருள்மிகு செல்லியம்மன் சன்னதி, அருள்மிகு மாரியம்மன் சன்னதி, நவகிரக சன்னதி என அமைந்துள்ளது.
கும்பாபிஷேகம்:
மாரியம்மன், செல்லியம்மன் கோயில் மேல்தளங்கள் புதியதாக அமைக்கப்பட்டு தரை மொசைக் போடப்பட்டு, புதியதாக மின்சார இணைப்புகள் அமைத்து உருவசிலையே இல்லாத செல்லியம்மனுக்கு புதிய உருவசிலை அமைத்து அரசமரத்தடி பிள்ளையார் அமைத்து, நவகிரகங்கள் அமைக்கப்பட்டு 04.02.2004 புதன்கிழமை அன்று கோயிலுக்கு கடைசியாக குடமுழுக்கு வெகுசிறப்புடன் செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருக்கோயிலுக்கு மராமத்து பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் தரைதளம் அமைக்கும் பணிகள் சுமார் 28.00 இலட்சம் செலவில் மேற்கொள்ள 15.12.2024 அன்று பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.
பூஜைகள் விவரம்:
இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன், மாரியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் (காலை, மாலை) நடைபெறுகிறது.
விசேஷ பூஜைகள்:
அமாவாசை, பௌர்ணமி, ஆடிமாதபிறப்பு, ஆடி 18, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி மாதம், தை பிறப்பு, பொங்கல், தை பூசம், நவராத்திரி 10 நாட்கள், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
வருட விழா
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலயத்தில் சித்திரை-1 திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.