Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்தான சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், முகப்பேர், சென்னை - 600037, சென்னை .
Arulmigu Santhana Srinivasa Perumal Temple, Mugapair, Chennai - 600037, Chennai District [TM000556]
×
Temple History

தல வரலாறு

சென்னை மாவட்டம் அம்பத்தூர் வட்டம் அண்ணா நகருக்கு அருகில் உள்ள முகப்பேர் கிராமத்தில் அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இத் திருக்கோயில் முதலில் ஆதி கால பட்டினமான முகப்பேர் பாலாற்றங்கரையில் கி. பி. 1338ஆண்டு சிவா விஷ்ணு ஆலயம் என்ற பெயரால் அப்போது காஞ்சி மாநகரை ஆண்ட மல்லிநாத சம்புவராயர் மன்னரால் கட்டப்பட்டது பிற்காலத்தில் மதவெறி கொண்ட துருக்கர்களின் ஆட்சியில் பல இந்து ஆலயங்கள் சூறையாடி அழிக்கப்பட்டன. அப்போது முகப்பேரில் மிகவும் பிரசித்தமாக விளங்கி வந்த மேற்படி சிவா விஷ்ணு ஆலயமும் துருக்கர்களால் சிதைக்கப்பட்டது புராதன சிறப்பு மிக்க சிவா விஷ்ண ஆலயம் அழிந்து சிதைந்த இடத்தில் மஹாலிங்கத்தையும் நந்தி பகவானையும் நாம் இன்றும் காணலாம் மேற்படி சிவா விஷ்ணு...