அருள்மிகு வரசித்தி விரநயகர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Varasithi Vinayagar Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000606]
×
Temple History
தல வரலாறு
தருமமிகு சென்னையில் கயிலைக்கு ஒப்பான மயிலையின் வடபுறம் பிருந்தாவரண்ய ஷேத்திரம் எனப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் மேற்குபுறம் பண்டி வெங்கடேசன் தெருவில் இத்திருக்கோயில் தெற்கு பக்கமாக எழுந்தருளியுள்ளது.சுமார் 100 வருடங்களுக்கு முன்பு குலாலர் என்று அழைக்கப்படும் குயவர் இன மக்கள் பெருவாரியாக இப்பகுதியில் குடியமர்ந்து தங்களது வழிபாட்டிற்கென இந்த விநாயகரை வடிவமைத்து சிறியதாக திருக்கோயில் கட்டி, தமது வியாபாரம் மேன்மேலும் பெருக இந்த விநாயகரை சர்வ சக்தி விநாயகர் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்து வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்ததாக செவிவழி செய்தி மூலம் அறிய முடிகிறது. அதன்பின்னர் மேற்படி திருக்கோயில் செட்டியார் மரபு வழி வந்தவர்கள் திருக்கோயிலை வழி நடத்தி இதன்மூலம் மேன்மேலும் சிறந்தோங்கினர் என்பதும்...தருமமிகு சென்னையில் கயிலைக்கு ஒப்பான மயிலையின் வடபுறம் பிருந்தாவரண்ய ஷேத்திரம் எனப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் மேற்குபுறம் பண்டி வெங்கடேசன் தெருவில் இத்திருக்கோயில் தெற்கு பக்கமாக எழுந்தருளியுள்ளது.சுமார் 100 வருடங்களுக்கு முன்பு குலாலர் என்று அழைக்கப்படும் குயவர் இன மக்கள் பெருவாரியாக இப்பகுதியில் குடியமர்ந்து தங்களது வழிபாட்டிற்கென இந்த விநாயகரை வடிவமைத்து சிறியதாக திருக்கோயில் கட்டி, தமது வியாபாரம் மேன்மேலும் பெருக இந்த விநாயகரை சர்வ சக்தி விநாயகர் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்து வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்ததாக செவிவழி செய்தி மூலம் அறிய முடிகிறது. அதன்பின்னர் மேற்படி திருக்கோயில் செட்டியார் மரபு வழி வந்தவர்கள் திருக்கோயிலை வழி நடத்தி இதன்மூலம் மேன்மேலும் சிறந்தோங்கினர் என்பதும் அறிய முடிகிறது. இத்திருக்கோயில் காலை 8.00 மணி முதல் 10 மணி முடியவும் மாலை 6.30 மணி இரவு 8.00 மணி முடியவும் நடை திறந்திருக்கும்.ஆலயத்தின் தினசரி நித்யபடி பூஜை சிவாகாம முறைப்படி காலை சந்தி 8.00 மணியளவில் சிறப்புற நடைபெற்று வருகிறது. ஆலயத்தில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி மற்றும் வருடாந்திர திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி, மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தினை ஆன்மீக அன்பர்கள் பெருவாரியாக வந்து தரிசித்து அருள்மிகு வரசித்தி விநாயகரின் அருளுக்கு பாத்திரராக அன்புடன் வேண்டுகிறோம்.சென்னை திருவல்லிக்கேணி இரயில் நிலையத்திலிருந்து 1கிமீ துரத்திலும், எழும்பூர்-சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து 4.கிமீ துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மெரினா கடற்கரை வழியாகவும், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகவும் வரலாம்.