தல வரலாறு

இத்திருக்கோயிலில் சித்தரான தாடிக்கார சுவாமியே அருவுருவத் திருமேனியாக வழிபடப்படுகிறார். விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட தாடிக்கார சுவாமி சிவகாசியில் அவதரித்தவர் ஆவார். தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் முக்தி அடைய பெற்றார். பின்னர் எழுபத்தைந்தாவது வயது வரை சிவத்தொண்டு செய்து பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் சித்ரா பௌர்ணமி அன்று ஜீவசமாதி அடைந்தார். இத்திருக்கோயில் ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மேலும் இத்திருக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக ல் ஆண்டு பிப்ரவரியில் இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது