அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோயில், அடையார், சென்னை - 600020, சென்னை .
Arulmigu Sundara Vinayagar Temple, Adyar, Chennai - 600020, Chennai District [TM000067]
×
Temple History
தல வரலாறு
தோற்றம் காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும். கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி நடக்க அருள்புரிபவர் விக்னேசுவரர் என அழைக்கப்படுகிறார். சைவமும் வைணவமும் சாக்தமும் இவரை உறவுமுறை ஆக்கிக் கொண்டனர். சிவனுக்கு மகன் ஆவான். திருமாலுக்கு மருமகன் ஆனான். முருகனுக்கு அண்ணன் ஆனான். பார்வதி படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சூரியன் தோழன் ஆனார். இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி விநாயகர் ...தோற்றம் காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும். கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி நடக்க அருள்புரிபவர் விக்னேசுவரர் என அழைக்கப்படுகிறார். சைவமும் வைணவமும் சாக்தமும் இவரை உறவுமுறை ஆக்கிக் கொண்டனர். சிவனுக்கு மகன் ஆவான். திருமாலுக்கு மருமகன் ஆனான். முருகனுக்கு அண்ணன் ஆனான். பார்வதி படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சூரியன் தோழன் ஆனார். இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி விநாயகர் விக்னேசுவரர் வணங்கியவர்களுக்கு குறை தீர்ப்பவராகவும் அல்லல் போக்குபவராகவும் விளங்குகிறார். திருப்போரூர் திருவான்மியூர் திருக்கழுகுன்றம் போன்ற பகுதிகளிலிருந்து வியாபார நோக்கத்திற்கு சரக்கு எந்தி வந்த வண்டிகள் இப்பகுதியை அடைந்து இளைப்பு ஆறி மயிலாப்பூர் திருவல்லிக்கேணி பாரிமுனை திருவொற்றியூர் முதலிய பகுதிகளுக்கு செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அடைந்தவர்கள் இளைப்பு ஆறி சென்றால் அடையாறு என இப்பகுதி வழங்கப்பட்டதோடு அனைவரும் தங்கி இளைப்பாறும் இடம் ஆண்டவன் அமர்ந்த அரச மரத்தடியாக இருந்தது.ஞானம் பெற்ற ஞானி ஒருவரால் கைகாட்ட சிறியதோர் ஒரு கோயில் களிமண் சுவரும் காரை பூச்சுமாக சிறிய விமானத்துடன் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களால் வழிபட்டு வந்தது. நாளடைவில் பொது மக்கள் குடியேறத் தொடங்கிய நிலையில் லாட்டிஸ் பால சாலைக்கும் கிண்டி சாலைக்கும் அடையாறு ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி காந்தி நகர் என பெயரிடப்பட்டு தனவந்தர்களின் காலனியாக மாறத் தொடங்கியது. காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமில்லாமல் அடையாறு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களும் எந்த பணி தொடங்குவதற்கு முன்பும் எங்கும் வெளியே செல்வதற்கு முன்பாகவும் சீரும் சிறப்பும் மிக்க அருள்மிகு சுந்தர விநாயகர் என பெயர் பெற்ற விநாயகரை வணங்கியே செயல்படுவது வழக்கம்...