தல வரலாறு
காமதேனு என்னும் தெய்வப் பசுவினை தேவேந்திரனிடமிருந்து பெற்ற வசிட்ட முனி, தனது பூசையின்போது இடையூறு செய்ததாகக் கருதி, அதனை காட்டுப்பசுவாக மாற்றிவிட்டதை அறிந்த தேவேந்திரன், காமதேனுவை திரும்பப் பெற வேண்டி, முனிவர் ஒருவர் அறிவுரைப்படி, தனது வாகனமான கார்மேகத்தின் துணைகொண்டு கருணை பொழி மழையால் இப்பகுதியை குளிர்வித்து, சோலையாக்கி, லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டு, சிவனருளால் இழந்த காமதேனுப் பசுவை மீட்டதால் இத்தலம் திருக்காரணி என்றும் பெயர்.