அருள்மிகு அசலாத்தம்மன் கோயில், நுங்கம்பாக்கம், சென்னை - 600034, சென்னை .
Arulmigu Asalathamman Temple, Nungambakkam, Chennai - 600034, Chennai District [TM000079]
×
Temple History
தல வரலாறு
திருத்தல வரலாறுபார்புகழும் பாரத பூமியில் தென் நாட்டில் சீர்மிக்க தொண்டை மண்டலத்தில் அமையப் பெற்ற பொம்ம ராஜபுரம் என்ற சிற்றூரினை பொன்னராஜன் என்ற வைணவ சமயத்தைச் சேர்ந்த குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்த காரணத்தினால் பொம்மராஜபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த சிற்றூர் தற்காலத்தில் நுங்கம்பாக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வரசனுக்கு தீராத சூலை நோயினால் ஏற்பட்ட சிரமத்தை அகத்தினுள் கொண்டு மனம் உருகி பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலை வணங்கி தன் உடல் பிணி போக்கி நலம் பெற வரம் கேட்டான். திரிவிக்கிரமனும் மன்னன் கனவில் பிரசன்னமாகி இவ்வூரின் கண் அமைந்துள்ள திருக்குளத்தினுள் மூழ்கி நீராடி எழுந்து இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசுவரனையும் அகிலத்தை ஆளும் அன்னை பரமேசுவரியையும் வழிப்பட்டால்...திருத்தல வரலாறுபார்புகழும் பாரத பூமியில் தென் நாட்டில் சீர்மிக்க தொண்டை மண்டலத்தில் அமையப் பெற்ற பொம்ம ராஜபுரம் என்ற சிற்றூரினை பொன்னராஜன் என்ற வைணவ சமயத்தைச் சேர்ந்த குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்த காரணத்தினால் பொம்மராஜபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த சிற்றூர் தற்காலத்தில் நுங்கம்பாக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வரசனுக்கு தீராத சூலை நோயினால் ஏற்பட்ட சிரமத்தை அகத்தினுள் கொண்டு மனம் உருகி பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலை வணங்கி தன் உடல் பிணி போக்கி நலம் பெற வரம் கேட்டான். திரிவிக்கிரமனும் மன்னன் கனவில் பிரசன்னமாகி இவ்வூரின் கண் அமைந்துள்ள திருக்குளத்தினுள் மூழ்கி நீராடி எழுந்து இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசுவரனையும் அகிலத்தை ஆளும் அன்னை பரமேசுவரியையும் வழிப்பட்டால் தீராத சூலை நோய் நீங்கி இகபரத்தில் நலன் பெறுவாய் எனக் கூறி மறைந்தார். கனவு நீங்கி கண் விழித்தெழுந்த அரசனும் இறைவன் அருளிய வாக்குப்படி திருக்குளத்தில் மூழ்கி நீராடி ஈசுவரனையும் அன்னை பரமேசுவரியையும் அகத்தில் இருத்தி வழிப்பட்டான். அக்கணமே அவனது சூலை நோயும் அகன்று வாழ்வும் மலர்ந்தது. அரசன் ஈசுவரனை அகத்தில் இருத்தி வழிப்பட்டதால் ஈசுவரன் அகத்து ஈசுவரன் என வழங்கப்பட்டார். நாளைடைவில் இப்பெயர் மருவி அகத்தீஸ்வரர் என்ற திருநாமமும் அகிலத்தை ஆளும் அன்னை பரமேசுவரி அகிலாண்டேசுவரி என்ற திருநாமமும் உடையவரானார். அன்னை அகிலாண்டேசுவரிக்கு தனிச் சன்னதி திருவானைக் காவல் தலத்திற்கு அடுத்து இத்தலத்தில் அமையப் பெற்றுள்ளது தனிச் சிறப்பாகும். மன்னன் கனவில் திருமால் பிரசன்னமாகி அருள் வழங்கியபடியால் இம்மன்னன் காலத்தில் இவ்வூரின் கண் பெருமாள் கோவில் கட்டப்பட்டு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எனவும் அன்னையை பத்மாவதி தாயார் எனவும் அழைக்கப்படலானர். இத்திருக்குளத்தின் வடபுறம் அசலாத்து அம்மன் கிராமதேவதையாக வாசம் செய்து வேண்டியர்க்கு வேண்டும் வரம் வழங்கி அருள் பாலித்து வருகின்றார். இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.