Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், Nungambakkam, Chennai - 600034, சென்னை .
Arulmigu Prasanna Venkatesa Perumal Temple, Nungambakkam, Chennai - 600034, Chennai District [TM000080]
×
Temple History

தல வரலாறு

திருத்தல வரலாறுபார்புகழும் பாரத பூமியில் தென் நாட்டில் சீர்மிக்க தொண்டை மண்டலத்தில் அமையப் பெற்ற பொம்ம ராஜபுரம் என்ற சிற்றூரினை பொன்னராஜன் என்ற வைணவ சமயத்தைச் சேர்ந்த குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்த காரணத்தினால் பொம்மராஜபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த சிற்றூர் தற்காலத்தில் நுங்கம்பாக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வரசனுக்கு தீராத சூலை நோயினால் ஏற்பட்ட சிரமத்தை அகத்தினுள் கொண்டு மனம் உருகி பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலை வணங்கி தன் உடல் பிணி போக்கி நலம் பெற வரம் கேட்டான். திரிவிக்கிரமனும் மன்னன் கனவில் பிரசன்னமாகி இவ்வூரின் கண் அமைந்துள்ள திருக்குளத்தினுள் மூழ்கி நீராடி எழுந்து இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசுவரனையும் அகிலத்தை ஆளும் அன்னை பரமேசுவரியையும் வழிப்பட்டால்...