Screen Reader Access     A-AA+
அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், உப்பிலிபாளையம், கோவை - 641018, கோயம்புத்தூர் .
Arulmigu Dhandumariamman Temple, Uppilipalayam, Coimbatore - 641018, Coimbatore District [TM009766]
×
Temple History

தல பெருமை

கோவை வாழ் மக்களால் தன் குறை நீங்க குலதெய்வமாக போற்றி வணங்கப்படும் தண்டுமாரி அன்னையின் வரலாறு கோவையின் மறுமலர்ச்சி வணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அது போல் மைசுர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான். அந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள் மழை பொழியத் தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள். ஆனால் அன்னையின் காலம் வரையறுக்கப்படவில்லை, தண்டு தண்டு எனும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு...